தீராத ஆசையுடன் இருக்கும் அருண் விஜய்.. இந்த 3 இயக்குனர்களின் படங்களில் நடிக்க வேண்டும்

அருண் விஜய் தற்போது ஹரி இயக்கத்தில் யானை படத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் பிரமோஷனுக்காக அருண்விஜய் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறார். ஆனால் படத்தின் ரிலீஸ் தேதி ஒவ்வொருமுறையும் தள்ளிப் போய்க்கொண்டே இருக்கிறது.

யானை படத்தில் பிரியா பவானி சங்கர், பிரகாஷ்ராஜ், ராதிகா சரத்குமார், அம்மு அபிராமி, யோகி பாபு என பலர் நடித்துள்ளனர். இந்நிலையில் ஜூலை 1ஆம் தேதி படம் வெளியாக உள்ளதாக யானை படத்தின் தயாரிப்பு நிறுவனத்தில் இருந்து அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது.

தற்போது அருண் விஜய் யானை படத்தை தவிர பார்டர், அக்னிச் சிறகுகள், சினம் ஆகிய படங்களை கைவசம் வைத்துள்ளார். இந்நிலையில் யானை படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் அருண் விஜய் பேசுகையில் பாலிவுட்டில் பல திட்டங்கள் வைத்துள்ளதாக கூறி உள்ளார்.

ஏற்கனவே சாஹோ படப்பிடிப்பில் கலந்து கொண்டதில் நான் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தேன். அந்த ரசிகர்கள் என்னை மிகவும் நேசிக்கிறார்கள். இதனால் பாலிவுட் படத்தில் நடிக்க விரும்புவதாக அருண் விஜய் கூறியுள்ளார். அதில் மூன்று இயக்குனர்களின் பெயரையும் அருண்விஜய் கூறியிருந்தார்.

அதாவது பாலிவுட் இயக்குனர்களான ராஜ்குமார் ஹிரானி, சஞ்சய் லீலா பன்சாலி மற்றும் ரோகிட் ஷெட்டி ஆகியோருடன் பணியாற்ற விரும்புவதாக அருண் விஜய் கூறியுள்ளார். மேலும் இந்த இயக்குனர்கள் இயக்கிய அனைத்து படங்களையும் பார்த்திருக்கிறேன்.

கண்டிப்பாக அவர்கள் இயக்கத்தில் நடித்தால் இந்திய பார்வையாளர்களுக்கு பொழுதுபோக்கு கூடிய ஒரு நல்ல திரைப்படத்தை நிச்சயமாக கொடுக்க முடியும் என அருண் விஜய் தெரிவித்துள்ளார். இதனால் மிக விரைவில் பாலிவுட் படத்தில் அருண் விஜய் நடிக்க வாய்ப்பு உள்ளது.

Next Story

- Advertisement -