ரீ என்ட்ரியில் அருண் விஜய் கலக்கிய 5 படங்கள்.. நின்னு பேசிய விக்டர்

அருண் விஜய் 90ஸ் காலகட்டத்தில் சினிமாவில் நுழைந்து நடிகராக அறிமுகமானார். பின்னர் கங்கா கௌரி,துள்ளித் திரிந்த காலம் மற்றும் பாண்டவர் பூமி ஆகிய படங்களில் ஆரம்ப காலத்தில் வெற்றி பெற்றார். பின்பு இவரின் அடுத்தடுத்த படங்களில் சில தோல்விகளை மட்டும் பார்த்து வந்தார். இந்த தோல்விக்கு தனது பெயர்தான் பிரச்சனை என்று நினைத்து அருண் குமார் என்ற இவர் பெயரை அருண் விஜய் என்று மாற்றிக் கொண்டார். தற்பொழுது இவரின் 5 வெற்றி படங்களை பற்றி பார்ப்போம்.

தடையறத் தாக்க: 2012 இல் வெளிவந்த இத்திரைப்படத்தை திருமேனி இயக்கியுள்ளார். இதில் அருண் விஜய்,மம்தா மோகன் தாஸ் நடித்துள்ளனர். இந்தப் படத்தை உருவாக்குவதற்கு ஏழு வருடங்கள் எடுத்து வெளியிட்டுள்ளனர். இது ஒரு ஆக்ஷன் திரில்லர் படமாக வெளிவந்தது. இதில் வரும் சண்டைக் காட்சிகள் ரொம்ப அழகாகவும், புதுவிதமாகவும் எடுக்கப்பட்டது என்று சொல்லலாம். இந்த படத்தை பார்ப்பதற்கு விறுவிறுப்பாகவும் கதைகள் அமைக்கப்பட்டிருக்கும். இந்த படத்திற்கு விமர்சனம் ரீதியாக பாராட்டு கிடைத்தது.

Also read: அருண் விஜய் படத்தில் நடித்த 2 நடிகர்கள்.. 3 பேருமே ஒரே குடும்பம்

என்னை அறிந்தால்: இந்தப் படம் 2015 ஆம் ஆண்டு கெளதம் இயக்கத்தில் அஜித்,அனுஷ்கா மற்றும் அருண் விஜய் இவர்களின் நடிப்பில் வெளிவந்துள்ளது. இதில் அருண் விஜய் முற்றிலும் மாறுபட்ட வில்லனாக நடித்திருப்பார். இதில் விக்டர் எனும் கதாபாத்திரத்தின் மூலம் இவருக்கு பெரிய அங்கீகாரம் கிடைத்தது. இந்த படத்தின் மூலம் இவரின் சினிமா கேரியருக்கு ஒரு திருப்புமுனையாக அமைந்தது என்று சொல்லலாம். இதில் சிறந்த துணை நடிகருக்கான விருதும் கிடைத்தது.

குற்றம் 23: இயக்குனர் அறிவழகன் இயக்கத்தில் 2017 ஆம் ஆண்டு வெளிவந்த இந்த படத்தில் அருண் விஜய்,மகிமா நம்பியூர் நடித்துள்ளனர். இந்தப் படத்தை அருண் விஜய் மற்றும் இந்தீர் குமார் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர். இந்த படத்திற்காக அதிகமான உழைப்பையும் மற்றும் எந்தவித டூப்பும் போடாமல் கடினமாக உழைத்து இருப்பார். இந்தப் படம் உண்மையான நிகழ்வுகளை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட திரைப்படம். இந்த படத்திற்காக ரஜினிகாந்த் மற்றும் சங்கர் உட்பட பல திரையுலக பிரபலங்கள் மூலம் பாராட்டு கிடைத்தது. இந்த படத்திற்கு பாசிட்டிவ் விமர்சனங்கள் அதிகமாகவே கிடைத்தது மட்டுமல்லாமல் அதிக லாபத்தையும் கொடுத்த படமாக இது இவருக்கு மாறியது.

Also read: விறுவிறுப்பாக தொடங்கிய அருண் விஜய்யின் அடுத்த படம்.. அதிரடிக்கு பஞ்சமே இல்ல போல!

தடம்: மகிழ் திருமேனி இயக்கத்தில் 2019 ஆம் ஆண்டு வெளியான இந்தப் படத்தில் அருண் விஜய் இரட்டை வடிவத்தில் நடித்திருப்பார். இந்தப் படம் கிரைம்,தில்லர்,சஸ்பென்ஸ் என பல பரிமாணங்களில் அமைந்திருக்கும். இதற்காக அதிக பாராட்டுகளும் மற்றும் விமர்சன ரீதியாகவும் வெற்றி கிடைத்தது. அந்த ஆண்டின் அதிக வசூல் செய்த படங்களில் ஒன்றாக இது இருந்தது.

யானை: இயக்குனர் ஹரி இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான அதிரடி திரைப்படம். இதில் அருண் விஜய்,பிரியா பவானி சங்கர்,ராதிகா சரத்குமார் மற்றும் சமுத்திரக்கனி என பலரும் நடித்துள்ளனர். இந்த படத்திற்காக அதிகமான பிஸிக்கல் ஒர்க் கடுமையாக செய்திருப்பார். இந்த படத்திற்கு பாசிட்டிவ் விமர்சனங்கள் மற்றும் நல்ல வரவேற்பும் கிடைத்தது.

Also read: 7 வருடம் கழித்து ரிலீஸுக்குத் தயாராகும் அருண் விஜய் படம்.. டிரெய்லரே செம ஹிட் ஆச்சு, இப்போ படம் ஹிட் ஆகுமா?

இவ்வாறு இந்த ஐந்து படங்கள் அருண் விஜய் ரீ என்ட்ரி கொடுத்து சூப்பர் ஹிட் அடித்த படங்களாகும். அதிலும் என்னை அறிந்தால் படத்தில் விக்டர் கதாபாத்திரத்தில் அஜித்துக்கு பயங்கர டஃப் கொடுத்திருப்பார்.

Sharing Is Caring:

சமீபத்திய சினிமா செய்திகள்