Connect with us
Cinemapettai

Cinemapettai

arun-vijay-cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

விறுவிறுப்பாக தொடங்கிய அருண் விஜய்யின் அடுத்த படம்.. அதிரடிக்கு பஞ்சமே இல்ல போல!

தமிழ் சினிமாவில் முறை மாப்பிள்ளை படத்தின் மூலம் அறிமுகமானவர் அருண் விஜய். அதன் பிறகு பல படங்களில் நடித்துள்ளார். அஜித் நடிப்பில் வெளியான என்னை அறிந்தால் படத்தில் வில்லனாக நடித்து ரசிகர்களிடம் பெரிய வரவேற்பைப் பெற்றார்.

அதன்பிறகு இவர் நடித்த படங்கள் அனைத்துமே அடுத்தடுத்து வெற்றியடைய தற்போது தமிழ் சினிமாவில் பல படங்களில் நடித்து வருகிறார் மேலும் மற்ற மொழி படங்களிலும் நடித்து வருகிறார்.

தற்போது அருண் விஜய் நடிப்பில் பாக்ஸர், அக்னி சிறகுகள், மாபியா 2, சினம் மற்றும் பார்டர் ஆகிய படங்களில் நடித்து வருகிறார் மேலும் ஹரி உடன் இணைந்து AV33 எனும் பெயரிடாத படத்தில் நடித்து வருகிறார்.

arun vijay

arun vijay

இப்படத்தின் படப்பிடிப்பின்போது கொரோனா தொற்று காரணமாக படப்பிடிப்பு சில மாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்டது. இதனால் படக்குழுவினர் வேறுவழியின்றி படப்பிடிப்பை நிறுத்தி வைத்தனர். மேலும் இப்படத்தின் படப்பிடிப்பு எப்போது துவங்கும் என்பது தெரியாமல் இருந்த ரசிகர்களுக்கு தற்போது அருண்விஜய் அவரை சமூக வலைத்தள பக்கத்தில் படத்தினை பற்றி அப்டேட் வெளியிட்டுள்ளார்.

அதில் பல மாதங்களாக நிறுத்திவைக்கப்பட்டிருந்த படப்பிடிப்பு தற்போது தொடங்கியுள்ளதாகவும் விரைவில் இப்படம் திரையரங்கில் வெளியிடப்படும் எனவும் தெரிவித்துள்ளார். இதன் படப்பிடிப்பு ராமேஸ்வரத்தில் விறுவிறுப்பாக தொடங்கப்பட்டதால் அருண் விஜய் ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான்.

Continue Reading
To Top