எருமை சாணி விஜய்யின் D-பிளாக் எப்படி இருக்கு.? அனல் பறக்கும் விமர்சனம்

சமீப காலமாக தமிழ் சினிமாவில் திரில்லர் பாணியில் பல திரைப்படங்கள் வெளிவந்து கொண்டிருக்கிறது. அந்த வரிசையில் தற்போது அருள்நிதி, அவந்திகா மிஸ்ரா, கரு பழனியப்பன், உமாரியாஸ் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளிவந்துள்ள திரைப்படம் டி பிளாக்.

அறிமுக இயக்குனர் விஜயகுமார் இயக்கத்தில் வெளிவந்துள்ள இந்த திரைப்படத்திற்கு தற்போது கலவையான விமர்சனங்கள் கிடைத்து வருகிறது. இந்த விஜயகுமார் வேறு யாரும் அல்ல யூட்யூபில் எருமை சாணி என்ற சேனலின் மூலம் பிரபலமாக இருப்பவர் தான்.

கதைப்படி ஒரு லேடிஸ் ஹாஸ்டலில் நடக்கும் பல மர்மமான விஷயங்கள்தான் இந்த டி பிளாக். வெள்ளியங்கிரி பாரஸ்ட் ஏரியாவுக்கு நடுவில் ஒரு இன்ஜினியரிங் காலேஜ் இருக்கிறது. அந்த காலேஜில் இருக்கும் லேடிஸ் ஹாஸ்டல் தான் டி பிளாக்.

வழக்கமாக ஹாஸ்டல் என்றாலே கட்டுப்பாடுகள் நிறைய இருப்பது போன்று இந்த ஹாஸ்டலுக்கும் ஏகப்பட்ட கெடுபிடிகள் இருக்கிறது. அந்த ஹாஸ்டல் வார்டனான உமா ரியாஸ் மாணவிகளுக்கு ஏராளமான கண்டிஷன்கள் போடுகின்றார்.

அதாவது மாலை 6 மணிக்குள் அனைவரும் ஹாஸ்டலுக்குள் வரவேண்டும், 9 மணிக்கு மேல் மொட்டை மாடிக்கு போகக்கூடாது, பத்து மணிக்கு மேல் விளக்கு எரிய கூடாது என்றெல்லாம் கண்டிஷன் போடுகிறார். இதற்கு காரணம் அந்த வனப்பகுதியில் புலி நடமாட்டம் அதிகமாக இருப்பது தான்.

இதற்கு பயந்து மாணவர்களும் அந்த விதிமுறைகளை கடைபிடிக்கின்றனர் ஆனால் அந்த ஹாஸ்டலில் எட்டு பெண்கள் மர்மமான முறையில் இறந்து போகின்றனர். அதில் அருள்நிதியின் தோழியும் ஒருவர். ஆனால் இந்த விவகாரத்தில் காலேஜ் பிரின்ஸ்பல் தலைவாசல் விஜய் போலீசுக்கு போகாமல் இருப்பது பலருக்கும் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.

அதன் பிறகு ஹீரோ அருள்நிதி அவருடைய தோழியின் மரணத்தில் இருக்கும் மர்மத்தை எப்படி கண்டுபிடிக்கிறார் என்பதுதான் கதை. மேலும் எட்டு இளம் பெண்களின் மரணத்தில் என்ன நடந்தது என்பதை மிகவும் திரில்லிங்காக இயக்குனர் கூறியிருக்கிறார்.

முதல் படம் என்று சொல்ல முடியாத அளவுக்கு ஒரு இயக்குனராக களம் இறங்கி இருக்கும் விஜயகுமாருக்கு ஒரு பாராட்டுகளை சொல்லலாம். ஆனால் திரைக்கதையில் சில இடங்களில் ஏற்படும் தொய்வை அவர் சரி செய்திருந்தால் நிச்சயம் இந்தப் படம் வேற லெவலில் இருந்திருக்கும்.

மற்றபடி அருள்நிதியின் நடிப்பு வழக்கம் போல நன்றாக இருக்கிறது. ஒரு காட்சியில் வரும் கரு பழனியப்பன் தன் நடிப்பால் அனைவரையும் ஈர்த்துள்ளார். அந்த வகையில் இந்த டி பிளாக் திரைப்படம் ஓரளவிற்கு ரசிகர்களை கவர்ந்துள்ளது.

Next Story

- Advertisement -