மௌனகுரு இயக்குனரின் அடுத்த படைப்பு ரசவாதி, வைரல் டீசர்.. சைக்கோவாக மிரட்டும் அர்ஜுன் தாஸ்

Arjun Das- Rasavathi Teaser : இயக்குனர் சாந்தகுமார் மிகவும் நேரம் எடுத்து வித்தியாசமான படங்களை தொடர்ந்து கொடுத்து வருகிறார். அந்த வகையில் மௌனகுரு மற்றும் மகாமுனி படத்திற்கு பிறகு இப்போது அர்ஜுன் தாஸ் நடிப்பில் உருவாகி இருக்கும் ரசவாதி என்ற படத்தை இயக்கியிருக்கிறார்.

இப்படத்தில் தன்யா ரவிச்சந்திரன், சுஜிதா சங்கர், சுஜாதா, விஜே ரம்யா சுப்ரமணியன், ரேஷ்மா வெங்கடேஷ் மற்றும் பலர் நடித்திருக்கின்றனர். இந்த படத்தின் டீசர் இப்போது வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. ஒவ்வொரு காட்சியும் நெஞ்சை பதப்பதைக்க வைக்கும் அளவிற்கு இருக்கிறது.

அதுவும் இந்த டீசரில் ஒரு வசனம் கூட இடம்பெறாத நிலையில் இசையமைப்பாளர் தமனின் இசையே நடுங்கச் செய்கிறது. அதுவும் நடிப்பு அரகன் அர்ஜுன் தாஸ் டீசரில் மிரட்டி இருக்கிறார். அதுவும் ரசவாதி படத்தில் மூன்று விதமான தோற்றத்தில் அர்ஜுன் தாஸ் நடித்திருக்கிறார்.

Also Read : 5 ஹீரோக்களின் வாழ்க்கையை தூக்கி நிறுத்திய லோகேஷ்.. அர்ஜுன் தாஸ்க்கு கொடுக்கப்பட்ட அதிக வாய்ப்பு

அதன்படி பள்ளி மாணவனாகவும், அதன் பிறகு கல்லூரி முடித்த இளைஞன் மற்றும் நடுத்தர வயது உடையவராக இருக்கிறார். அதுவும் அர்ஜுன் தாஸ் இப்படத்தில் கைதி மற்றும் மாஸ்டர் படங்களை தாண்டி மிகவும் சைக்கோ தனமாக மிரட்டி இருக்கிறார் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை.

சாந்தகுமாரின் படம் எப்போது அடுத்ததாக வரும் என்று எதிர்பார்த்த ரசிகர்களுக்கு ரசவாதி படம் இருக்கும் டீசரை வைத்து பார்க்கும் போதே தெரிகிறது. இப்போது ரசவாதி டீசர் ரசிகர்களால் கவனம் ஈர்க்கப்பட்டு இருக்கிறது.