புதன்கிழமை, டிசம்பர் 11, 2024

பிரைவசி வேணுமா? வீட்ல இருங்க.. கோபத்தில் கொந்தளித்த அர்ஜுன் கதறிய ஐஸ்வர்யா

ஜீ தமிழில் பிரபல நிகழ்ச்சியான சர்வைவர் ஷோவை அர்ஜுன் தொகுத்து வழங்குகிறார். இதில் காடர்கள், வேடர்கள் என இரு அணிகளாகப் பிரிந்து போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிகழ்ச்சியில் சில கட்டுப்பாடுகள் உள்ளது. அதை மீறி போட்டியாளர் சரண் ரகசியமாக செல்போனில் பேசியுள்ளார். அதை அறிந்த அர்ஜுன் அவரை கண்டித்தார்.

திரும்பவும் இதுபோன்ற தவறுகள் நடக்க கூடாது என எச்சரித்தார். வேடர்கள் அணி தோற்றதால் ட்ரைபிள் பஞ்சாயத்தில் எல்லோரும் சரணை நாமினேட் செய்தார்கள். ஆனால் சரணுக்கு தங்கமுத்து கிடைத்து காப்பாற்றப்பட்டார். சரணுக்கு ஒரு பவரும் கிடைத்தது. வேடர்கள் அணியிலிருந்து ஒருவரை சரண் எலிமினேட் செய்யலாம்.

அவர் அணியில் இருந்து விஜயலட்சுமியை எலிமினேட் செய்தார் சரண். விஜயலட்சுமி மூன்றாம் உலகத்திற்கு சென்றார். இன்றைய முதல் ப்ரோமோவில் அர்ஜுன் பேசிக்கொண்டிருக்கும்போது சரண் மற்றும் ஐஸ்வர்யா பேசுவதை கவனிக்காமல் இவர்களுக்குள் இருவரும் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

அதை கவனித்த அர்ஜுன் என்ன என்று கேட்கும் போது சரண் இப்போட்டியில் இருந்து வெளியேற போவதாக ஐஸ்வர்யாவிடம் சொல்லுகிறார். அதைக் கேட்டு அர்ஜுன் கோபமடைந்து, ஒருவரை நம்பி இந்த ஷோ கிடையாது, இந்த பூச்சாண்டி கிச்சாண்டி எதுவுமே இங்க கிடையாது, நீங்கள் விரும்பினால் வெளியே போகலாம் என கோபமாகக் கூறினார்.

இரண்டாவது ப்ரோமோவில் ஐஸ்வர்யாவிடம் அர்ஜுன் கோபமடைகிறார். கேமரா சூட் செய்யும்போது பிரைவசி வேண்டும் ஏன் சொல்றீங்க என ஐஸ்வர்யாவிடம் அர்ஜுன் கேட்கும்போது ஐஸ்வர்யா அதை மறுத்து விடுகிறார்.

நீங்கள் கேட்டதை நிரூபித்தால் இந்த ஷோவை விட்டு வெளியே போறீங்களா, பாத்ரூம் மட்டும் தான் உங்களுக்கு பிரைவசி, இது ஒரு கேம் ஷோ, விளையாடதானே வந்து இருக்கீங்க, பிரைவசி வேணும்னா வீட்டிலேயே இருக்க வேண்டியதுதானே என கோபமாக ஐஸ்வர்யாவை அர்ஜுன் திட்டினார்.

https://youtu.be/8fvtapiOpe4

- Advertisement -

Trending News