ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 15, 2024

கப்பு முக்கியம் பிகிலு.. பிக்பாஸ் அர்ச்சனாவுக்கு நாசுக்காக ஹிண்ட் கொடுத்த உடன்பிறப்பு

Biggboss 7: இந்த வாரம் பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஃப்ரீஸ் டாஸ்க் நடைபெற்று வருகிறது. அதில் போட்டியாளர்களின் குடும்பங்கள் வீட்டுக்குள் வந்து நிகழ்ச்சியை சுவாரசியமாக்கி வருகின்றனர். அதில் அனைவருமே தங்கள் பிள்ளைகளுக்கு ஏதாவது ஒரு ஹிண்டை கொடுத்து செல்கின்றனர்.

அந்த வகையில் நேற்று பிக்பாஸ் வீட்டுக்குள் வந்த அர்ச்சனாவின் தங்கை ஒரு விஷயத்தை நாசுக்காக அவருக்கு தெரியப்படுத்தினார். அதாவது தற்போது ரசிகர்களின் ஆதரவு யாருக்கு அதிகமாக இருக்கிறது என்று பார்த்தால் அது அர்ச்சனா, விசித்ரா தான்.

அதில் அர்ச்சனா தன்னுடைய நடவடிக்கைகளால் ஒவ்வொரு வாரமும் தனக்கான ஆதரவை அதிகப்படுத்தி வருகிறார். அப்படி பார்க்கும்போது இவரும் இறுதி மேடையை அலங்கரிக்க போகும் போட்டியாளர்களில் ஒருவராக இருப்பார் என்பதில் சந்தேகம் இல்லை.

Also read: அடிச்சும் திருந்தாத புள்ளைய ஆப்பு வச்சு திருத்திட்டீங்க.. ஹவுஸ் மேட்ஸை ஓரங்கட்டி ஸ்கோர் செய்த நிக்சனின் ரத்த உறவு

அதைத்தான் அர்ச்சனாவின் தங்கையும் நாசுக்காக வெளிப்படுத்தி இருக்கிறார். அதாவது அவர் தன் அக்காவிடம் நீ ஏதாவது ஒரு பெட்டில கைய வைக்கணும்னா அது துணி பெட்டியா மட்டும் தான் இருக்கணும். இதை நல்லா ஞாபகம் வச்சுக்கோ என்று கூறினார்.

அர்ச்சனாவும் அதற்கு வேகமாக தலையாட்டினார். இதன் மூலம் அர்ச்சனாவின் தங்கை உனக்கு ஃபைனலுக்கு செல்லும் வாய்ப்பு இருக்கிறது. அதனால் அவசரப்பட்டு பணப்பெட்டியில் கையை வைத்து விடாதே என தன் அக்காவுக்கு மறைமுகமாக உணர்த்தியிருக்கிறார்.

பொதுவாக வீட்டுக்குள் வரும் சொந்தங்களுக்கு வெளியில் நடப்பதை சொல்லக்கூடாது என அறிவுறுத்தப்படும். ஆனால் இந்த முறை போட்டியாளர்களின் குடும்பங்கள் பல விஷயங்களை வெளிப்படையாகவும், மறைமுகமாகவும் பேசினார்கள். இதனால் இனிவரும் வாரங்களில் ஆட்டம் மாறவும் வாய்ப்பு இருக்கிறது.

Also read: எதிரிக்கு எதிரி நண்பன்.. தினேஷை வெறுப்பேற்ற ரட்சிதா போட்ட பதிவு, பிக்பாஸில் ஆதரவு இவருக்கு தான்

- Advertisement -

Trending News