அடிச்சும் திருந்தாத புள்ளைய ஆப்பு வச்சு திருத்திட்டீங்க.. ஹவுஸ் மேட்ஸை ஓரங்கட்டி ஸ்கோர் செய்த நிக்சனின் ரத்த உறவு

nixon-biggboss
nixon-biggboss

Biggboss 7: நேற்று பிக்பாஸ் வீடு எந்த வன்மமும் இல்லாமல் கலகலப்பாக இருந்தது. இவ்வளவு நாட்கள் ஒருவருக்கொருவர் கோபத்தையும், வெறுப்பையும் காட்டி வந்த போட்டியாளர்கள் இந்த வார டாஸ்க்கால் குதூகலமாகி இருக்கின்றனர்.

அதன்படி இந்த வாரம் போட்டியாளர்களின் ரத்த சொந்தங்கள் பிக்பாஸ் வீட்டை அலங்கரிக்கின்றனர். அதில் நேற்று விக்ரம், அர்ச்சனா, பூர்ணிமா, விஜய் வர்மா ஆகியோரின் பெற்றோர்கள் என்ட்ரி கொடுத்தனர். அதை தொடர்ந்து இன்று நிக்சனின் அப்பா வீட்டுக்குள் வந்திருக்கும் ப்ரோமோ வெளியாகி உள்ளது.

Also read: நிக்சனை நாசுக்காக அசிங்கப்படுத்தி விட்ட அர்ச்சனாவின் அப்பா.. ஆண்டவரும் டோட்டல் டேமேஜ்

இதைத்தான் ஆடியன்ஸ் பெரிதும் எதிர்பார்த்தனர். அந்த அளவுக்கு நிக்சன் ஏகப்பட்ட சம்பவங்களை வீட்டுக்குள் செய்து இருக்கிறார். அதனால் அவரை பார்க்க வரும் பெற்றோர்கள் எப்படி ரியாக்ட் செய்வார்கள் என்பதை பார்க்க ரசிகர்கள் ஆர்வத்துடன் இருந்தனர்.

அந்த வகையில் நிக்சனின் அப்பா ஆரம்பமே அட்டகாசம் என்ற அளவுக்கு ஸ்கோர் செய்திருக்கிறார். நாங்க நாய் மாதிரி குறைச்சா கூட வீட்ல எந்திரிக்க மாட்டான். அடிச்சும் திருந்தாத புள்ளைய ஆப்பு வச்சு திருத்திட்டீங்க. கேப்டனா பதவி கொடுத்து ஒரு பெல்லையும் வெச்சீங்க பாருங்க என அவர் பேசிய ஒவ்வொன்றும் வேற லெவலில் இருந்தது.

Also read: கமலுக்கு ஒரு குத்து, மாயாவுக்கு ஒரு குத்து.. யாரு சாமி இவரு.? பொளந்து கட்டும் டைட்டில் வின்னர் அப்பா

மேலும் இவ்வளவு நாள் போராடினேன் இவன் மாற மாட்டானான்னு, நல்லா வச்சு செய்றீங்க. இப்படியாக வீட்டை கலகலப்பாக்கிய அவர் கடைசியில் சொன்ன பஞ்ச் தான் தரமான சம்பவமாக இருந்தது. நீ திருந்திட்டேன்னு சொன்ன பாத்தியா, உன் நம்பர ப்ளாக்ல இருந்து எடுத்துட்டேன் என அவர் சொன்னது எதிர்பாராதது.

இப்படியாக வெளியாகி உள்ள ப்ரோமோ இன்றைய எபிசோடுக்கான ஆவலையும் ஏற்படுத்தி இருக்கிறது. இதைப்போலவே விசித்ராவின் கணவர் மற்றும் பிள்ளைகளின் வருகையையும் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

Advertisement Amazon Prime Banner