ஸ்வீட் கடையை ஊத்தி மூடிய சரவணன்.. அர்ச்சனா செய்த வில்லத்தனம்!

விஜய் டிவி ராஜா ராணி2 சீரியலில் தற்போது சரவணன் சமையல் போட்டியில் வெற்றி பெற்று 5 லட்சம் பரிசுத் தொகையுடன் ஊர் திரும்பியுள்ளார். சொந்த ஊரில் சரவணனுக்கு மேளதாளத்துடன் அமோக வரவேற்பு கிடைத்தது. அதன் பிறகு ஸ்வீட் கடைக்கு சென்ற சரவணனுக்கு பேரதிர்ச்சி காத்திருந்தது.

ஏனென்றால் சரவணன் சமையல் போட்டிக்கு சென்றபோது, அர்ச்சனா அவருடைய ஜவுளி கடையில் இரண்டு சேலை வாங்கினால் சரவணன் ஸ்வீட் கடையில் இரண்டு கிலோ ஸ்வீட் கிடைக்கும் என்ற ஆஃபரை கொடுத்து அர்ச்சனாவின் சுயலாபத்திற்காக சரவணனின் சீட்டு கடையை ஊத்தி மூடி விட்டார்.

தற்போது சமையல் போட்டிக்கு பின்பு ஸ்வீட் கடைக்கு வந்த சரவணன், கல்லா காலியாக இருப்பதைப் பார்த்து என்ன நடந்தது என்பதை கேட்டு தெரிந்து கொண்டார். பின்பு அர்ச்சனாவை பற்றி வீட்டில் சொன்னால் கலவரம் வரும் என்று கடையில் ஏற்பட்ட நஷ்டத்தை வீட்டில் சொல்லாமல் மறைத்து விட சரவணன் முடிவெடுத்துவிட்டார்.

இருப்பினும் ஸ்வீட் கடையில் இருந்து வீடு திரும்பிய சரவணன் முகம் வாடி போனதை அறிந்த சந்தியா ஏதோ ஒன்று நடந்திருக்கிறது என்று சந்தேகப்படுகிறார் . இதன்பிறகு சந்தியாவிற்கு இந்த விஷயம் தெரிந்தால் அர்ச்சனாவை ரவுண்ட் கட்டுவார் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

ஆனால் அதையும் சந்தியா கூடிய விரைவில் தெரிந்துகொண்டு அர்ச்சனாவிற்கு ஆப்பு வைக்கப் போகிறார். அத்துடன் சமையல் போட்டியில் சரவணனுடன் கலந்துகொண்ட போட்டியாளர் ஹனா சரவணனின் வீட்டிற்கு வருவதாக தொலைபேசியில் கூறியிருப்பதை, சரவணன் அவருடைய வீட்டாரிடம் தெரிவிக்கிறார்.

எனவே அடுத்த வாரம் ஹனா  சீரியலில் என்ட்ரி கொடுத்து, சரவணனிடம் விதவிதமான சமையல்களை கற்றுத் தெரிந்து, அதை யூடியூபில் போட்டு சரவணின் சமையலை மேலும் பிரபலப்படுத்த உள்ளார்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்