வைகை புயலை தூக்கிவிடும் இசைப்புயல்.. மாஸாக வந்த மாமன்னன் அப்டேட்

தமிழ் சினிமா காமெடி உலகின் முடி சூடா மன்னனாக இருந்தவர் வைகைப்புயல் வடிவேலு. சில தனிப்பட்ட காரணங்களால் இவர் சில வருடங்கள் சினிமாவில் இருந்து ஒதுங்கி இருந்தார். படங்கள் நடிக்காத நிலையிலும், வடிவேலுவுக்கு தமிழ் சினிமா ரசிகர்களிடையே மிகப்பெரிய ஆதரவு இருந்தது. சமூகவலைத்தளங்களில் மீம்ஸ்கள் மூலம் ரசிகர்கள் மனதில் வெற்றி பெற்றார்.

இதையடுத்து மீண்டும் நகைச்சுவையில் தன்னை நிலை நிறுத்திக்கொள்ள சினிமாவுக்குள் வந்த வடிவேலுவுக்கு மிகப்பெரிய ஏமாற்றம் தான் கிடைத்தது. ரசிகர்களுக்கும் வடிவேலுவின் கம்பேக் ஏமாற்றத்தை கொடுத்தது என்று தான் சொல்ல வேண்டும். வடிவேலு மலை போல் நம்பி இருந்த ‘நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்’ திரைப்படமும் அவருக்கு கைகொடுக்கவில்லை .

Also Read:இதுவரை நடிக்காத கதாபாத்திரத்தில் நடிக்கும் வடிவேலு.. மாரி செல்வராஜ் செய்யப் போகும் சம்பவம்

இதனால் வடிவேலுவின் சினிமா கேரியர் மீண்டும் கேள்விக்குறியாக வாய்ப்பிருந்த நிலையில், அவருக்கு கிடைத்திருக்கும் மிகப்பெரிய அதிர்ஷ்ட வாய்ப்பு தான் மாமன்னன். இயக்குனர் மாரிசெல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் , கீர்த்திசுரேஷ், பகத் பாசில் ஆகியோர் நடிக்கும் இந்த படத்தில் வைகைப்புயல் வடிவேலு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து கொண்டிருக்கிறார்.

தன்னுடைய முந்தைய படங்களான கர்ணன் மற்றும் பரியேறும் பெருமாள் திரைப்படங்களில் சாதிய ஆதிக்க கொடுமைகளை பற்றி பேசியிருந்த மாரிசெல்வராஜ், முதன்முதலில் இந்த படத்தில் அரசியல் பேசியிருக்கிறார். படத்தின் போஸ்டரில் கத்தியுடன் உதயநிதி, துப்பாக்கியுடன் வடிவேலு என இந்த படத்திற்கு எதிர்பார்ப்பு எகிற ஆரம்பித்துவிட்டது.

Also Read:உதயநிதிக்கு சினிமா ஆசையை தூண்டிவிட்ட இயக்குனர் .. சர்ச்சைக்கு பஞ்சம் இல்லாத கடைசி படம்

படத்தின் போஸ்டரை பார்க்கும் பொழுதே வடிவேலு இதுவரை ஏற்காத காதாபாத்திரத்தில் நடிக்கவிருக்கிறார் என்பது நன்றாகவே தெரிகிறது. தற்போது மாமன்னன் படத்தின் மற்றொரு அப்டேட்டும் வெளியாகி இருக்கிறது. இந்த படத்தில் இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைப்பில், வைகைப்புயல் வடிவேலு ஒரு பாடலை பாடியிருக்கிறார்.

                                                         மாமன்னன் படக்குழுவுடன் இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான்

Maamannan movie team

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான், பாடலாசிரியர் யுகபாரதி, இயக்குனர் மாரிசெல்வராஜ் , வடிவேலு ஒன்றாக இருக்கும் புகைப்படத்தை படக்குழு பதிவிட்டிருக்கிறது. வடிவேலு இதற்கு முன்பு நிறைய பாடல்களை பாடியிருக்கிறார். முதல் பாடத்தில் இவர் பாடிய ‘எட்டணா இருந்தா’ பாடல் அப்போது மிகப்பெரிய அளவில் ஹிட் அடித்தது.

Also Read:உதயநிதி, வடிவேலு காம்போவில் வெளியான மாமன்னன் ஃபர்ஸ்ட் லுக்.. துப்பாக்கி, கத்தியுடன் மிரட்டல்

 

Sharing Is Caring:

அதிகம் படித்தவை