இசையைத் தாண்டி ஏஆர் ரகுமான் பண்ணும் செயல்கள்.. கொள்கையுடன் கட்டுக்கோப்பாக வாழும் இசைப்புயல்

AR Rahuman: மனதிற்கு இதமான இசையும், வித்தியாசமான கருவிகளை பயன்படுத்தி புது ட்ரெண்டையும் உருவாக்கிய பெருமை ஏஆர் ரஹ்மானே சாரும். அது மட்டுமில்லாமல் 2 ஆஸ்கார் விருதையும் பெற்று பெருமை சேர்த்திருக்கிறார். அப்படிப்பட்ட இவர் எந்த நாட்டுக்கு போனாலும் தமிழை விட்டுக் கொடுக்காமல் தாய் மொழியான தமிழை தான் அதிகமாக உச்சரித்து பேசி இருக்கிறார்.

இவர் எந்த மேடைகளில் ஏறினாலும் தாய்மொழியான தமிழில் எல்லாம் புகழும் இறைவனுக்கே எனக் கூறுவது வழக்கமான ஒரு விஷயம். இதனைத் தொடர்ந்து பிள்ளைகளையும் எப்படி ஒரு கோட்பாடுடன் வளர்க்க வேண்டும் என்று ஒரு முன் உதாரணமாக இருந்து வருகிறார். இவருக்கு இரண்டு பெண் குழந்தைகளும் ஒரு ஆண் பையனும் இருக்கிறார்.

இவருடைய மூத்த மகள் கதிஜாவை, ஏ ஆர் ரகுமானிடம் சவுண்ட் இன்ஜினியராக வேலை பார்க்கும் பையனுக்கு தான் திருமணம் பண்ணி கொடுத்திருக்கிறார். அத்துடன் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று எந்தவித கட்டுப்பாடையும் விதிக்காமல் சுதந்திரமான வாழ்க்கையை வாழ கற்றுக் கொடுத்திருக்கிறார்.

Also read: அப்போ உள்ள இளையராஜா போல் ஒரு டசன் படங்களை கையில் வைத்திருக்கும் அனிருத்.. அதிர்ந்து போன ஏஆர் ரஹ்மான்

அதற்கேற்ற மாதிரி அவருடைய மூத்த மகள் கதீஜாவும் குடும்பத்தின் பாரம்பரியமான உடையே தான் அணிய வேண்டும் என்று பழக்கப்படுத்தி வருகிறார். முஸ்லிமாக இருந்தாலும் மற்ற மதங்களையும் மதிக்க வேண்டும் என்று எல்லா மதத்தையும் போற்றி வருகிறார். இதுவரை எந்த இடத்திலும் ஒரு வார்த்தை கூட தவறாக பேசி சர்ச்சையை ஏற்படுத்தியதே இல்லை.

முக்கியமாக தன் குடும்பத்தில் இருப்பவர்களுக்கும் தமிழின் முக்கியத்துவத்தையும் பரிந்துரை செய்து மனைவியை தமிழில் பேச சொல்லும் ஒரு வழிகாட்டியாக இருந்து வருகிறார். இசையை தாண்டி இசைப்புயலால் தமிழ்நாட்டுக்கு பெருமை என்று சொல்லும் அளவிற்கு தொடர்ந்து பல விஷயங்களை மேற்கொண்டு வருகிறார். எந்த அளவிற்கு புகழின் உச்சிக்கு என்றாலும் அதை தலைக்கனமாக எடுத்துக் கொள்ளாமல் ஒரு கொள்கையுடன் வாழ்ந்து வருகிறார்.

Also read: ஏஆர் ரஹ்மான் இசையில் எஸ்பிபி-யின் குரல்.. திரும்பத் திரும்ப கேட்கத் தூண்டும் 10 பாடல்கள்

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்