ராஜிக்கு கதிர் கொடுத்த அப்பாயிண்ட்மெண்ட் ஆர்டர்.. தங்கையும் மச்சானையும் சேர்த்து வைக்கும் குமரவேலு

Pandian Stores 2: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில், கதிர் மற்றும் ராஜிக்காகவே இந்த நாடகத்தை மக்கள் பார்த்து வருகிறார்கள். அந்த அளவிற்கு இவர்களுடைய ரொமான்ஸ் மற்றும் கெமிஸ்ட்ரி தூள் கிளப்பி வருகிறது. பாண்டியனின் மகன்கள் ஜெயிலில் இருந்து வீட்டிற்கு வந்த நிலையில், சரவணன் கல்யாணம் முடிகிற வரை எந்த பிரச்சினையும் வேண்டாம் என்று பாண்டியன் கூறியிருக்கிறார்.

இதனை தொடர்ந்து ராஜி வாசலில் கோலம் போட்டுக் கொண்டிருக்கிறார். அப்பொழுது ராஜியை சீண்டிப் பார்க்கும் வகையில் இவருடைய அண்ணன் குமரவேலு கோலத்தை அழித்து பல சேட்டைகளை பண்ணுகிறார். இதை மாடியில் இருந்து பார்த்த கதிர் கோபத்துடன் கீழே வந்து தண்ணீர் பைப்பை குமரவேலு முகத்தில் அடித்து விடுகிறார்.

ராஜி அண்ணன் கொடுத்த டார்ச்சர்

அத்துடன் கதிர், குமரவேலுவின் சட்டையை பிடித்து கோலம் போட்டு இருக்கிறது உன் கண்ணுக்கு தெரியவில்லையா என்று கேட்கிறார். அதற்கு ராஜி அண்ணன் நடுரோட்டில் கோலம் போட்டா அப்படித்தான் பண்ணுவேன் என்று சொல்லியதால் சண்டை ஆரம்பம் ஆகிறது. இதை பார்த்த ராஜி, கதிரின் கையைப் பிடித்து சரவணன் மாமா கல்யாணம் முடிகிற இந்த சண்டையை ஓரமா வச்சுக்கோங்க.

கோலத்து மேல தான வண்டியை விட்டான், ஆள் மேலே விடலல்ல விடு என்று ராஜி சொல்கிறார். அதற்கு கதிர், ராஜியை பார்த்து நான் என்ன விடுவது, நீதான் விடனும் என் கையை என்று சொல்லி ரொமான்ஸில் புகுந்து விட்டார். உடனே ராஜி போட்ட கோலம் அழிந்து போனதால் கதிர் அதை போட்டுக் கொண்டிருக்கிறார். இதை பக்கத்தில் இருந்து ராஜி வேடிக்கை பார்க்கிறார்.

உடனே உள்ளே இருந்து வந்த மீனா இங்கே என்ன நடக்கிறது என்று கேட்கிறார். அதற்கு ராஜி போட்ட கோலத்தை அவன் அண்ணன் வீணாக்கி விட்டான். அதன் பாவமாக இருந்தது என்று நான் போடுகிறேன் என்று கதிர் சொல்கிறார். அதற்கு மீனா, முதல்ல பாவமாக இருக்கும் அப்புறம் அது காதலாக மாறும் என்று நக்கலாக பேசி கிண்டல் அடிக்கிறார். இதை கேட்டதும் ராஜி மற்றும் கதிர் முகத்தில் புன்னகையுடன் காதலும் வெளிப்பட்டது.

ஆக மொத்தத்தில் கதிர்க்கும் ராஜிக்கும் வேண்டாம் வெறுப்பாக கல்யாணம் நடந்தாலும், தற்போது இவர்கள் தான் உண்மையான காதலர்கள் என்று சொல்லும் அளவிற்கு ஜோடி பொருத்தம் செமையாக இருக்கிறது. அதிலும் ராஜி அண்ணன் கொடுக்கிற ஒவ்வொரு டார்ச்சரிலும் தான் இவர்களுடைய நெருக்கம் இன்னும் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்