ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 15, 2024

விசாலாட்சியின் ஓவர் பேச்சால் 40% காலி.. அப்பத்தாவின் கேரக்டர் முடிவுக்கு வந்தது

சீரியல் என்றாலே ஒரு விஷயத்தை ரொம்ப நாளாகவே இழுத்தடித்து சொல்வது தான் போல.
இப்படித்தான் ஆதிரையின் நிச்சயதார்த்தத்தை போரடிக்கும் வகையில் ஜவ்வு மாதிரி கொண்டு போய்கிட்டு இருக்கிறது எதிர்நீச்சல். ஆதிரையின் நிச்சயதார்த்தம் கேள்விக்குறியாக மாறிய நிலையில் விசாலாட்சி தன்னுடைய மகளுக்காக குணசேகரனிடம் கெஞ்சிப் பார்த்து வேலைக்கு ஆகாது என்று முடிவெடுத்து அப்பத்தாவிடம் நியாயம் கேட்கும் என்ற பெயரில் ஓவராக பேசுகிறார்.

அதாவது நீங்கள் தானே இந்த கல்யாணத்தை நான் முன்னாடி நின்று நடத்தி வைக்கிறேன் என்று சொன்னீர்கள். இப்பொழுது இந்த 40% சொத்து தான் உங்களுக்கு முக்கியமாக தெரிகிறதா. உங்களுடைய பேத்தி வாழ்க்கை இப்படி நெற்கதியாக இருக்கிறத பார்த்தால் உங்களுக்கு மனசு இறங்கலையா அப்படி என்ன கல் மனசு. இந்த சொத்தை வச்சு அப்படி நீங்க என்னதான் பண்ண போறீங்க.

Also read: நிச்சயதார்த்தமே வியாபாரமாக மாற்றிய குணசேகரன்.. அப்பத்தா எடுக்கப் போகும் முடிவு இதுதான்

இப்போ என்ன உங்களுக்கு அந்த சொத்தை கொடுக்கக் கூடாது அவ்வளவு தானே நீங்களே வச்சுக்கோங்க இதுக்கு அப்புறமும் என் மகளை இப்படியே விட்டா நல்லா இருக்காது. அதனால நானும் அவளும் ஒரேடியாக போகிறோம் என்று அப்பத்தாவை பிளாக் மெயில் செய்து பேசுகிறார். அடுத்ததாக ஆதிரை ரொம்ப நல்ல பொண்ணு மாதிரி அப்பத்தாவை பார்த்து நீங்கள் தலையிடாமல் இருந்தால் நானே என் அண்ணனிடம் சண்டை போட்டு என் வாழ்க்கைக்கு ஒரு முடிவை தேடி இருப்பேன்.

நீங்க குறுக்கே வந்ததால் தான் இவ்வளவு பிரச்சினைக்கும் காரணம் என்று அவர் பங்குக்கு பேசுகிறார். உடனே அப்பத்தா பேசி முடிச்சாச்சா இப்போ உங்க எல்லாத்துக்கும் என்னுடைய 40% சொத்து தானே வேணும் வச்சுக்கோங்க நான் எழுதித் தருகிறேன். ஆனால் நான் ஏன் இப்படி பண்ணினேன் என்று இப்போ உங்களுக்கு புரியாது. கடைசியில பீல் பண்ணுவீங்க ஆனா அப்போ உங்களுக்கு எந்தவித பிரயோஜனமும் இல்ல என்று பொடி வைத்து அப்பத்தா பேசுகிறார்.

Also read: கோபியை குழப்பிவிடும் அம்மா.. பதறிப் போய் பாக்யாவிடம் வாய் கொடுத்து மூக்குடைந்த ராதிகா

ஆனால் இந்த சீன் எல்லாம் பார்க்கும் பொழுது ரொம்பவே கண் கலங்க வைத்தது. அதிலும் அப்பத்தாவின் பார்வை பார்க்கவே கஷ்டமாக இருக்கிறது. அடுத்ததாக இன்றைய எபிசோட் படி ஜனனி, எஸ் கே ஆர் குடும்பத்திற்கு போன் பண்ணி விஷயங்கள் அனைத்தையும் சொல்லி மறுபடியும் மண்டபத்திற்கு வர சொல்கிறார். குணசேகரன் சொத்து பத்திரத்தை ரெடி பண்ணி அப்பத்தாவிடம் கையெழுத்து வாங்குகிறார்.

பிறகு குணசேகரன் திட்டப்படி சொத்து அவரிடம் வந்த பிறகு நிச்சயதார்த்தம் நடக்கிறது. ஆனால் இதை நிச்சயதார்த்தம் என்று சொல்வதை விட இதுக்கு சரியான பெயர் வியாபாரம் என்று சொல்லலாம். ஒவ்வொருவரும் அவங்க எதிர்பார்த்தபடி வியாபாரம் சக்சஸ் ஆக ஆகிவிட்டது. ஆனால் இன்னொரு பக்கம் அப்பத்தா எங்க போனார் என்று தெரியாமல் சக்தி ஜனனி அவரைத் தேடிக் கொண்டு அலைகிறார். அப்பத்தாவிற்கு என்னதான் ஆச்சு அவர் எங்கே போய்விட்டார் என்று தெரியவில்லை. இனிமேல் இந்த அப்பத்தா கேரக்டர் இப்போதைக்கு வராதபடி அமையப் போகிறது.

Also read: கங்கணம் கட்டிக்கொண்டு அலையும் மீனாவின் அப்பா.. துணிந்து சவால் விட்ட தனம்

- Advertisement -

Trending News