குணசேகரனை வைத்து ஆட்டத்தை ஆரம்பிக்கும் அப்பத்தா.. கோமாளியாக போகும் வில்லன்

எதிர்பாராததை எதிர்பாருங்கள் என்று சொல்லும் அளவிற்கு விறுவிறுப்பாக போய்க்கொண்டிருக்கும் சீரியல் எதிர்நீச்சல். வீட்டிற்குள் பூனையாக பம்பி கொண்டிருந்த ஈஸ்வரி, பாயும் புலியாக கல்லூரியில் பேசியதை பார்க்கையில ரொம்பவும் அழகாக இருந்தது. அதே நேரத்தில் இதில் கொஞ்சமாவது குணசேகரனிடம் பேசி இருக்கலாம் என்று தோண வைத்தது.

அத்துடன் கல்லூரியில் பேசுவதற்கு கூட குணசேகரனுக்கு தெரியாமல் பேசிட்டு வந்தது தான் பார்ப்பதற்கு ஏற்றுக் கொள்ள முடியாமல் இருக்கிறது. மேலும் என்னதான் விறுவிறுப்பாக கொண்டு போனாலும் இந்த ஆதிரை கல்யாணத்தை வைத்து ரொம்ப நாட்களாகவே ஜவ்வு மாதிரி இழுத்துகிட்டு இருக்குது கொஞ்சம் போர் அடிக்க வைக்கிறது. இந்த சீரியல் நல்லா போய்க்கொண்டிருக்கிறது என்று சொன்ன காரணத்துக்காகவா இப்படி ஒரு திருஷ்டி.

Also read: அம்பலமாக போகும் குணசேகரின் சூழ்ச்சி.. ரகசிய வீடியோவை பார்க்கும் அப்பத்தா!

ஈஸ்வரி கல்லூரியில் பேசிவிட்டு வீட்டிற்கு வந்து வாசலில் ரேணுகா, நந்தினி மற்றும் ஜனனி இவர்களிடம் பேசிக் கொண்டிருக்கும் போது அவருக்கு கொடுத்த கிஃப்டை மறந்து விட்டதாக அந்த கல்லூரியின் ஆசிரியர் கொடுக்கும் போது அதை குணசேகரன் பார்த்துவிட்டார். உடனே அவர், யாருடா அவங்க கிஃப்ட் எல்லாம் கொடுத்துட்டு போறாங்க என்று கேட்கிறார். அதுக்கப்புறம் என்ன நடக்கும் வழக்கம்போல் சொல்லி சமாளிப்பாங்க என்று நம்மளுக்கு தெரிஞ்சது தான்.

இந்த கிஃப்ட் தர்ஷன்காக கொடுத்துட்டு போறாங்க என்று சொல்ல அதையும் அந்த முட்டாள் கோணவாயன் நம்பிடுவார். அடுத்ததாக குணசேகரன் ஒரு முக்கியமான முடிவு எடுத்து இருக்கிறேன் என்று கூப்பிடுகிறார். பின்பு அப்பத்தாவும், ஜனனியும் மாடியில் நின்று கொண்டு நான் இங்கு தான் இருக்கிறேன் என்று கூறுகிறார். அதற்கு அவர் கீழே இறங்கி வா அப்பத்தா நான் ஒரு விஷயம் உன்கிட்ட பேசணும் என்று சொல்கிறார்.

Also read: சுடிதாரில் கெத்து காட்டும் பாக்யா, ஷாக் ஆன கோபி.. அடுத்த டாஸ்க்கை இறக்கும் ராதிகா

உடனே அப்பத்தா நான் மேலே இருந்து கேட்டுக்குறேன் நீ சொல்ல வேண்டியதை சொல்லு என்று சொல்லுகிறார். இதை பார்க்கும்போது குணசேகரன் ஏதோ ஒரு முடிவை எடுத்திருக்கிறார் என்பதைவிட அப்பத்தா இவரை வைத்து ஏதோ ஒரு திருவிளையாடல் விளையாட்டு ஆரம்பித்து விட்டிருக்கிறார் என்பது நன்றாக தெரிகிறது.

அடுத்து குணசேகரனின் பிளான் படி அப்பத்தாவிடம் நீ சொன்னபடி நிச்சயதார்த்த வேலை எல்லாம் ஆரம்பித்து விட்டாச்சு அதனால நான் கேட்டபடி இந்த 40% சொத்துக்கான டாக்குமெண்டையும் நான் ரெடி பண்ணியிருக்கேன். நீ அதை சரி பார்த்து சொல்லு பின்பு மற்ற வேலைகள் எல்லாம் நான் பார்த்துக் கொள்கிறேன் என்று கூறப் போகிறார். இதற்கும் கண்டிப்பாக அப்பத்தா சம்மதிக்க மாட்டார் அதற்கு ஏற்ற மாதிரி வேற காரணத்தை சொல்லப் போகிறார். குணசேகரன் வேற வழியில்லாமல் அவர் சொல்வதைக் கேட்டுக் கொண்டு கடைசியில் கோமாளியாக இருக்கப் போகிறார்.

Also read: வழக்கம்போல் புலம்பித் தவிக்கும் கோபி.. பாக்யாவை படாத பாடு படுத்தும் ராதிகா

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்