அம்பலமாக போகும் குணசேகரின் சூழ்ச்சி.. ரகசிய வீடியோவை பார்க்கும் அப்பத்தா!

குடும்பத்தில் உள்ள அனைவரையும் பார்க்க வைத்த ஒரே சீரியல் என்றால் அது எதிர்நீச்சல் தான். எப்பொழுது இந்த வீட்டின் மருமகள்கள் சுயமாக நின்று முடிவெடுத்து முன்னேறுவார்கள் என்று ஒவ்வொரு நாளும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். திறமை இருந்தும் வீட்டுக்குள்ளேயே அடிமையாக இருப்பதைக் கண்டு ஜனனி அவர்களை ஊக்கப்படுத்தி அவர்களுக்கு இருக்கும் லட்சியத்தை அடைய வைப்பதற்கு போராடி வருகிறார்.

அதற்கு முதல் கட்டமாக ஈஸ்வரி படிப்படியாக அவருடைய வெற்றியை நோக்கி வந்து கொண்டிருக்கிறார். ஏற்கனவே அப்பத்தாவின் கிராமத்தில் இவர் கொடுத்த ஸ்பீச் இவருக்கு மட்டுமில்லாமல் இவரை சுற்றி இருக்கிறவங்களுக்கும் பெரிய பாடமாக இருந்தது. அத்துடன் இப்பொழுது மறுபடியும் கல்லூரியில் ஒரு தன்னம்பிக்கையான ஸ்பீச் கொடுக்க வேண்டும் என்று இவரை அழைத்து இருக்கிறார்கள்.

Also read: வழக்கம்போல் புலம்பித் தவிக்கும் கோபி.. பாக்யாவை படாத பாடு படுத்தும் ராதிகா

ஈஸ்வரியும் இந்த வாய்ப்பை மிஸ் பண்ண கூடாது என்று தைரியமாக முடிவெடுத்து கல்லூரிக்கு போயிருக்கிறார். பின்பு இவரிடம் ஜனனி போனில் பேசும் போது இது உங்களுக்கு கிடைத்த இரண்டாவது வாய்ப்பு நன்றாக பயன்படுத்தி நீங்கள் நினைத்தபடி முன்னேறி வாருங்கள் என்று கூறுகிறார். இதை ஈஸ்வரி வாய்ப்பாக பார்க்காமல் இவருக்கு கிடைத்த புது வாழ்க்கை என்று நினைத்து இவருடைய ஸ்பீச்சை கொடுக்கிறார்.

கண்டிப்பாக இது இவருடைய வாழ்க்கை மட்டுமல்லாமல் இவருக்கு பெரிய தைரியத்தையும் கொடுக்கும் என்று நினைக்கிறார். அடுத்ததாக ஜனனி மற்றும் அப்பத்தா உடைய ஏற்பாட்டால் ஆதிரைக்கு நிச்சயதார்த்த புடவை எடுக்கிறார்கள். அத்துடன் ஆதரை, அருணும் ரொம்பவே சந்தோஷமாக அவர்களின் காதலை வெளிக்காட்டி வருகிறார்கள்.

Also read: வாலை சுருட்டி கிட்டு அடங்கி போகும் குணசேகரன்.. எல்லா விதத்திலும் பால் போட நினைக்கும் அப்பத்தா

இது பார்க்கவே சந்தோஷமாக இருந்தாலும் இதை கெடுக்கும் விதமாக குணசேகரன் முயற்சி செய்து வருகிறார். குணசேகரன் பிளான் படி ஜான்சி ராணி மற்றும் கரிகாலன் நிச்சயதார்த்தத்திற்காக இவர்கள் தனியாக டிரஸ் எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். அப்பொழுது திடீரென்று தாரா பாப்பா, கையில் போன் வைத்துக்கொண்டு குணசேகரனிடம் இவர்கள் எல்லாரும் யாரு என்று கேட்கிறார்.

அப்பொழுது குணசேகரன் மூஞ்சி போன போக்க பார்க்கணுமே அய்யோ மாட்டிக்கிட்டோமே அப்படிங்கற மாதிரி இருந்துச்சு. இதில் தான் ஒரு டூவிஸ்ட் இருக்குது. அதாவது தாரா கையில் வைத்திருக்கும் போனில் கண்டிப்பாக அப்பத்தா வீடியோ காலில் இருக்கிறார். இவர்கள் அனைவரையும் ரகசியமாக வீடியோ காலில் பார்த்து குணசேகரனின் சூழ்ச்சியை முறியடிக்க போகிறார்.

Also read: எதிர்நீச்சலுக்கு போட்டியாக சன் டிவி போட்ட மாஸ்டர் பிளான்.. 14 வருடங்களுக்கு பின் வெளிவர உள்ள 2ம் பாகம்

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்