குணசேகரனை மடக்கிய எஸ் கே ஆர் தம்பிகள்.. இவரை மிஞ்சும் அளவிற்கு பிளான் போட்ட அப்பத்தா

மிகப் பரபரப்பாக ஒவ்வொரு நாளும் சூடு பிடித்துக் கொண்டிருக்கிறது எதிர்நீச்சல் சீரியல். இதில் ஒவ்வொருவருடைய கேரக்டரும் வித்தியாசமாக இருக்கிறது. அதிலும் ரேணுகா, நந்தினி எந்த நேரத்தில் எப்படி பேசுவார்கள் என்று எதிர்பார்க்க முடியவில்லை. இவ்வளவு நாள் அமைதியாக இருந்தவர்கள் இப்பொழுது வாய் தொடுப்பு கொஞ்சம் கூடுதலாகிவிட்டது. ஆனால் இது குணசேகரனுக்கு எதிராக ஒரு நல்ல விஷயமாக தான் திரும்புகிறது.

மேலும் குணசேகரன் அம்மா எப்பொழுது ஒரு நல்ல மாமியாராக மாறுவார் என்று எதிர்பார்த்து நிலையில் மகளுக்கு ஒரு பிரச்சனை என்றதும் அப்படியே நல்லவராக மருமகள்கள் பக்கம் சாய்ந்து விட்டார். இதுவும் ஒரு விதத்தில் நல்லதாக தான் இருக்கிறது. அடுத்ததாக அந்த வீட்டில் சக்தி அப்படியே ஜனனி பக்கம் போய் விட்டார். இப்பொழுது ஜனனி மட்டும் தான் அவர் கண்ணுக்கு தெரியுது அந்த மாதிரி இருக்கிறார்.

Also read: எஸ் கே ஆரின் தம்பி மூலம் காய் நகர்த்தும் அப்பத்தா.. குணசேகரனை பழிவாங்க நினைக்கும் அரசு

அடுத்ததாக அந்த வீட்டில் மிச்சம் இருப்பது மூன்று பேர் மட்டும் மாறாமல் அதே ஆணவத்தில் சுற்றி திரிவார்கள். இவர்கள் கொட்டத்தையும் சீக்கிரத்தில் அடக்கி விடுவார்கள் அந்த வீட்டில் மருமகள்கள். மேலும் ஆதிரையின் நிச்சயதார்த்த விஷயங்களை பற்றி பேசுவதற்கு எஸ்கேஆர் இன் தம்பிகள் குணசேகரன் வீட்டிற்கு வந்திருக்கிறார்கள். அப்பொழுது விசாலாட்சி அம்மா அரசு விடம் உங்களுக்கு என்னென்ன வேணும் என்று நீங்கள் கேளுங்கள் என்று கூறுகிறார்.

அதற்கு அரசு அதைக் கேட்டு முடிவு பண்ணுவதற்கு தான் நாங்கள் இங்கே வந்திருக்கிறோம் என்று கூறுகிறார். ஆனால் நீங்கள் நினைத்தபடி நிச்சயதார்த்த வேலைகளை பற்றி நான் எதுவும் கேட்கப் போவதில்லை என்ற சொல்கிறார். உடனே குணசேகரன் வேற என்ன வேணும் என்று கேட்கிறார். அப்பொழுது அரசு மொத்த சொத்தில் ஐந்து பங்கு இருக்கிறது. அதில் ஆதிரைக்கும் ஒரு பங்கு வரவேண்டும் என்று கேட்கிறார்.

Also read: ஏமாற போறாங்க, அதனால் ஓவர் பில்டப்.. குணசேகரின் நக்கல் நையாண்டி பேச்சு

இதை எதிர்பார்க்காத குணசேகரன், ரொம்பவும் டென்ஷன் ஆகி வார்த்தையை கொஞ்சம் என்ன பேசணும்னு யோசிச்சு பேசுங்க என்று கூறுகிறார். பின்பு எஸ்கேஆர் தம்பி அருண் எங்க அண்ணன் கேட்டது சரிதான் எனக்கு அதில் உடன்பாடு இருக்கிறது என்று சொல்கிறார். ஆனாலும் அரசு இந்த மாதிரி கேட்டது யாராலும் எதிர்பார்க்க முடியாததாக இருக்கிறது. ஆனால் கண்டிப்பாக இவர் சொத்துக்காக இந்த மாதிரி பேசக்கூடிய ஆள் கிடையாது.

இவருக்கு பின்னாடி இந்த பிளான் போட்டுக் கொடுத்தது அப்பத்தாவாகத் தான் இருக்கும். இதற்கு குணசேகரனின் முடிவு என்னவாக இருக்கும் கண்டிப்பாக 40% சொத்துக்காக இதுக்கு ஓகே தான் சொல்லப் போகிறார். அடுத்து இதையெல்லாம் பார்த்து சக்தி, ஜனனிடம் எல்லாரும் அவங்க அவங்க தேவைகளை பற்றி யோசிக்கும் போது நாம் மட்டும் ஏன் நம்ம வாழ்க்கை பற்றி யோசிக்காமல் கஷ்டப்படணும் என்று கேட்கிறார். இவர் கேட்டதும் சரிதான் இதற்கு ஜனனி என்ன முடிவு எடுக்கப் போகிறார் என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.

Also read: சுந்தரி, கண்ணம்மா நடித்துள்ள N4 படம் எப்படி?. அனல் பறக்கும் விமர்சனம் இதோ!

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்