அஜித் பேரை சொல்லி ஏமாற்றும் சமூக விரோதிகள்.. அவருக்கே ஆபத்தாக முடியும் அபாயம்

தமிழ் சினிமாவில் டாப் ஹீரோவாக இருக்கும் அஜித்துக்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றனர். இவருக்காக எதையும் செய்யும் ரசிகர்கள் ஒரு புறம் இருக்க சிலர் இவர் பெயரை சொல்லி ஏமாற்றும் சம்பவங்களும் நடந்து வருகிறது. ஏனென்றால் அஜித் ஒரு படத்தில் நடித்து முடித்து விட்டால் பிறகு அது சம்பந்தமான ப்ரமோஷன், இன்டர்வியூ போன்ற எதிலும் கலந்து கொள்ள மாட்டார்.

அது மட்டுமல்லாமல் இவருக்கென நற்பணி மன்றம், ரசிகர் மன்றம் போன்ற எதுவும் கிடையாது. இப்போது இருக்கும் நடிகர்கள் தங்களுக்கென நற்பணி மன்றம் ஒன்றை ஆரம்பித்து ரசிகர்களுக்கு முடிந்த அளவு உதவி செய்து வருகின்றனர். ஆனால் அஜித் மற்றவர்களுக்கு தெரியாமலேயே பல உதவிகளை மறைமுகமாக செய்து கொண்டிருக்கிறார்.

Also read: லோகேஷ்க்கு பின் இணையும் பிரம்மாண்ட கூட்டணி.. 400 கோடி பட்ஜெட்டில் உருவாகும் தளபதி 68

அதை ஒருபோதும் அவர் விளம்பரப்படுத்தியது கிடையாது. இதுதான் தற்போது அவருக்கே பிரச்சனையாக முடிந்திருக்கிறது. அதாவது சில சமூக விரோதிகள் அஜித் பெயரை சொல்லி பண மோசடியில் ஈடுபட்டு வருகிறார்கள். அதில் அஜித் தன்னுடைய ரசிகர்களுக்கு வீடு கட்டி தர போகிறார் என்று கூறி சிலர் ஏழை மக்களிடம் 1.3 லட்சம் பணத்தை ஏமாற்றி வாங்கி இருக்கின்றனர்.

எப்படி என்றால் அஜித் ரசிகர்களுக்கு 15 லட்சம் மதிப்புள்ள வீடுகளை கட்டி தர இருக்கிறார். அந்த வீடு வேண்டுமென்றால் 1.3 லட்சம் அவருடைய மேனேஜருக்கு கொடுக்க வேண்டும் என்று கூறி பணத்தை வாங்கி இருக்கின்றனர். இதில் கொடுமை என்னவென்றால் இந்த விஷயம் எதுவும் அஜித்திற்கு தெரியாது.

Also read: விஜய்க்கு ஒரு குட்டி கதை என்றால் அஜித்துக்கு.? இன்று வரை போர்க்கொடி தூக்கும் அந்த ஒரு வார்த்தை

அவர் கவனத்திற்கு வராமலேயே சிலர் இது போன்ற விஷயத்தை செய்து ஊரை ஏமாற்றி வருகின்றனர். இதற்கு முக்கிய காரணம் அஜித் தான் செய்யும் உதவியை வெளியுலகத்திற்கு தெரியாமல் செய்வதுதான். இதை பயன்படுத்திக் கொண்டுதான் இது போன்ற சமூக விரோதிகள் அவருக்கு எதிராக செயல்பட்டு வருகின்றனர்.

இதை அஜித் கருத்தில் கொண்டு சரி செய்யாவிட்டால் அவருடைய பெயர் கெட்டுப் போய்விடும். அதனால் அவர் தான் செய்யும் உதவிகளுக்கு பொறுப்பான ஒருவரை நியமித்து கண்காணிக்க வேண்டும் என்று திரையுலகில் பிரபலங்கள் கருத்து கூறி வருகின்றனர். மேலும் விரைவில் அஜித் இதை சரி செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Also read: மோசமான கெட்டவனாக துணிவில் அஜித்தை பார்க்கலாம்.. வினோத் அப்டேட்டால் ஆடிப் போன கோலிவுட்

- Advertisement -