அடுத்த முதல்வரா? என்னப்பா தளபதிக்கு பீதியை கிளப்புறீங்க! கிழித்து தொங்கவிட்ட ஹீரோவின் அப்பா

Actor Vijay: இப்போது சினிமாவை விட அரசியல் களம் பரபரப்பாக சென்று கொண்டிருக்கிறது. ஏனென்றால் சினிமா பிரபலங்கள் பலரும் அரசியலுக்கு படையெடுத்து வருகிறார்கள். இந்த சூழலில் வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் விஜய் அரசியலில் களம் இறங்க உள்ளார். இப்போது அதற்கான வேலையில் மூச்சாக இறங்கி இருக்கிறார்.

மேலும் தனது முதல் டார்கெட்டாக இளைஞர்களை தன் வசப்படுத்திக் கொண்டிருக்கிறார். தற்போது பள்ளி மாணவர்களுக்கு நிறைய நலத்திட்டங்களை கொடுத்து வருகிறார். மேலும் விஜய் ரசிகர்கள் அடுத்த முதல்வர் தளபதி தான் என இப்போது ஆர்ப்பரித்துக் கொண்டிருக்கிறார்கள். இது அரசியல் தலைவர்களுக்கு கலக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

Also Read : விஜய் அரசியலுக்கு வந்தால் விளைவுகள் வேற மாதிரி இருக்கும்.. உங்க கப்பலே கவுந்து கிடக்கு இதுல இப்படி உருட்டா!

இப்படி இருக்கும் சூழலில் சமீபத்தில் சூர்யாவுக்கு கட்டவுட் வைத்ததில் இரண்டு ரசிகர்கள் இறந்துவிட்டனர். இந்த விஷயம் வைரலாக பரவியது. இதை அடுத்து தமிழ்நாட்டில் முக்கிய பகுதி ஒன்றில் சூர்யாவின் போஸ்டர் ஒட்டப்பட்டு இருக்கிறது. அதில் அடுத்த முதல்வர் சூர்யா என ரசிகர் ஒருவர் குறிப்பிட்டிருக்கிறார்.

என்னப்பா அரசியலுக்கு வரும் விஜய்க்கு பீதியை கிளப்புறீங்க என்ற மாதிரி தான் அந்த போஸ்டர் இருந்தது. இந்த போஸ்டர் சமூக வலைதளங்களில் பரவ தொடங்கியதும் சூர்யாவின் அப்பா சிவக்குமார் யார் எழுதினார்களோ அந்த ரசிகரை வறுத்தெடுத்து விட்டாராம். அதோடு மட்டுமல்லாமல் இந்த வேலையெல்லாம் வச்சுக்கிட்டீங்கன்னா ரசிகர் மன்றத்தை மொத்தமாக களைத்து விடுவோம் என பயம் காட்டி இருக்கிறாராம்.

Also Read : விஜய்யின் வேகத்தை குறைத்து சமாதானப்படுத்தும் பெருந்தலைகள்.. ஆரம்ப புள்ளியோடு வைக்க போகும் முற்றுப்புள்ளி

மேலும் நேரடியாகவே சூர்யாவை கூப்பிட்டு இந்த விஷயத்தை இப்போதே ஆராய்ந்து சரி பண்ணி விடு. இல்லையென்றால் இது நல்லா இருக்காது தேவையில்லாத பேச்சுகள் இனி வரக்கூடாது என்று கடுமையாகவே கூறியிருக்கிறாராம். இதைப் பற்றி தெரிந்த உடன் சூர்யா மிகுந்த வருத்தப்பட்டு இருக்கிறாராம்.

அதன் பிறகு தனது ரசிகர்களிடம் ஒரு கோரிக்கையையும் சூர்யா வைத்திருக்கிறார். அதாவது இனிமேல் யாரும் கட்டவுட்டுக்கு பால் அபிஷேகம் பண்ண கூடாது. அதோடு மட்டுமல்லாமல் கட்டவுட் வைக்க வேண்டாம் என்று சூர்யா கூறியிருக்கிறாராம். இதை ரசிகர்கள் கேட்டு நடந்தால் நன்றாகத்தான் இருக்கும்.

Also Read : பட்ட அவமானங்களை படமாக்கும் தளபதி 68.. எல்லாத்தையும் ஒரு கை பார்த்திடலாம் துணிந்து நிற்கும் விஜய்

- Advertisement -spot_img

Trending News