தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ஒவ்வொரு சீரியல்களுக்கும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. குறிப்பாக விஜய் டிவியின் ‘பாரதி கண்ணம்மா’ என்ற தொலைக்காட்சித் தொடருக்கு எக்கச்சக்கமான ரசிகர்கள் உண்டு.
ஆகையால் அந்த சீரியல், தற்போது ராஜா ராணி2 என்ற சீரியல் உடன் மகா சங்கமிக்க உள்ளது. ஏற்கனவே விறுவிறுப்புடன் சென்று கொண்டிருக்கும் பாரதிகண்ணம்மா சீரியலில்,ராஜா ராணி2-வும் எப்பொழுது ஒன்றாக சேர போகிறார்கள் என்ற ஆர்வத்துடன் ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கும் நிலையில்,
கூடிய விரைவில் இந்த இரண்டு சீரியல்களும் சங்கமித்து ஒரு மணி நேரம் ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது , இதன் பின்பு பாரதிகண்ணம்மா சீரியலில் பாரதியும் கண்ணம்மாவும் சேருவதற்கு அதிக வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது.
அதேபோல் பாரதிகண்ணம்மா சீரியலில் கண்ணம்மாவின் கதாபாத்திரமும், ராஜா ராணி2 சீரியலில் சந்தியாவின் கதாபாத்திரமும் சீரியலை அதிக விறுவிறுப்புடன் கொண்டு செல்வதால், இவர்கள் இருவரும் ஒரே சீரியலில் இணைந்தால், தூள் கிளப்பும் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாகும்.
ஏற்கனவே விஜய் டிவியில் மகா சங்கமம் என்ற பெயரில், பாக்கியலட்சுமி மற்றும் பாண்டியன் ஸ்டோர் சீரியல்கள் இணைந்து ஒளிபரப்பு செய்யப்பட்டது. அப்போது கிடைத்த அதிக வரவேற்பின் அடிப்படையில் தற்போது மீண்டும் அதே யுத்தியை கையாள விஜய் டிவி முடிவெடுத்துள்ளது.
எனவே அடுத்த வாரம் பாரதிகண்ணம்மா, ராஜா ராணி2 என்ற இரு தொடர்களின் மகாசங்கம் குறித்து ரசிகர்கள் அதிக ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.