இந்திய அணியின் கதவை தட்டும் மற்றும் ஒரு வீரர்.. 5வது கீப்பரால் ட்ராவிட்டுக்கு வந்த தலைவலி

ஒரு காலத்தில் நயன் மோங்கியா, எம்எஸ்கே பிரசாத், சபா கரீம் போன்ற கீப்பர்களை வைத்துக்கொண்டு இந்திய அணி, குண்டு சட்டிக்குள் குதிரை ஓட்டிக் கொண்டு இருந்தது. இவர்கள் மூவரும் பேட்டிங்கில் அந்த அளவுக்கு ஜொலிக்கக் கூடிய வீரர்கள் கிடையாது. இந்த மூன்று கீப்பர்களையும் இந்திய அணி மாறி, மாறி வைத்து கொண்டு தான் விளையாடி வந்தது.

ஆனால் மற்ற அணிகளில் ஆடம் கில்கிரிஸ்ட் , பிரண்டன் மெக்குளம் போன்ற அதிரடி விக்கெட் கீப்பர்கள் மிரட்டி வந்தனர். பல வருடங்களாக இந்திய அணிக்கு இப்படி ஒரு கீப்பர் அமையவில்லை. இதனால் இந்திய அணி மிடில் ஆர்டர்களில் மிகவும் சொதப்பி வந்தது.

Also Read: கிடைத்த வாய்ப்பும் பறிபோனது.. இந்திய அணியிலிருந்து கைவிடப்பட்ட சஞ்சு சாம்சன்

அதன் பின்னர் சௌரவ் கங்குலி ஒரு திட்டம் போட்டு இந்திய அணியின் சுவர், ராகுல் டிராவிட்டை கீப்பிங் செய்யுமாறு கேட்டுக் கொண்டார். அதன் பின்னர் இந்திய அணியில் டிராவிட் கொஞ்ச நாட்களாக விக்கெட் கீப்பர் பணியை செய்து வந்தார்.

பின்னர் வந்தார் மகேந்திர சிங் தோனி. இவர் வருகைக்குப் பின் இந்திய அணி ஒரு அசைக்க முடியாத சக்தியாக கிரிக்கெட்டில் மாறியது. பல எதிரணி பவுலர்களை தனது ஆட்டத்தின் மூலம் புரட்டி எடுத்தார் மகேந்திர சிங் தோனி. மிக சிறு வயதில் இந்திய அணிக்கு கேப்டனாக பொறுப்பேற்று அனைத்து விதமான கோப்பைகளையும் பெற்றுத் தந்தார்.

Also Read: முக்கியமான 3 வீரர்களை ஒதுக்கும் இந்திய அணி..கேள்விக்குறியாகும் கிரிக்கெட் கேரியர்

இப்பொழுது இவர் ஓய்வுக்கு பின் இந்திய அணியில் பல அதிரடி விக்கெட் கீப்பர்கள் உருவாகி உள்ளனர். குறிப்பாக ரிஷப் பண்ட், சஞ்சு சாம்சன், கே எல் ராகுல், ஈசான் கிசான் போன்ற அதிரடி வீரர்கள் கலக்கி வருகின்றனர். இவர்கள் எல்லோரும் மிக மிக இளம் வயது ஆட்டக்காரர்கள். இப்பொழுது புதிதாக மற்றும் ஒரு கீப்பர் உருவாகி வருகிறார்.

சமீபத்தில் நடைபெற்ற விஜய் ஹசாரா கோப்பையில் நான் ஒரு விக்கெட் கீப்பர் இருக்கிறேன் என்பது போல் தனது திறமையை வெளிப்படுத்தி உள்ளார் கே எஸ் பரத். இவரும் ஒரு இளம் ஆட்டக்காரர். இப்பொழுது இவரும் இந்திய அணி கதவைத் தட்டி வருகிறார். ஏற்கனவே நான்கு கீப்பர்களை வைத்துக் கொண்டு முழிக்கும் ராகுல் டிராவிட்டிற்கு ஐந்தாவது கீப்பரால் தலைவலி ஏற்பட்டுள்ளது.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்