அண்ணாத்த படத்தின் பட்ஜெட் எத்தனை கோடி தெரியுமா? அதில் ரஜினி சம்பளம் மட்டும் தலைய சுத்துது

தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாராக வலம் வரும் ரஜினிகாந்த் தற்போது இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் அண்ணாத்த என்ற படத்தில் நடித்து வருகிறார். இறுதியாக ரஜினி நடிப்பில் வெளியான தர்பார் படம் தோல்வியை சந்தித்ததால் அண்ணாத்த படத்தை ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்து காத்து கொண்டிருக்கின்றனர்.

சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகியுள்ள அண்ணாத்த படம் வரும் தீபாவளி அன்று திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ரசிகர்கள் இப்படத்தின் டிரைலர் வெளியாகும் என எதிர்பார்த்தனர். ஆனால் தற்போது வரை படம் குறித்த எந்த தகவலும் வெளியாகவில்லை.

இந்நிலையில் அண்ணாத்த படத்தின் பட்ஜெட் குறித்த தகவல் ஒன்று இணையத்தில் கசிந்துள்ளது. அதன்படி ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள அண்ணாத்த படத்தின் மொத்த பட்ஜெட் சுமார் 255 கோடி ரூபாயாம். இதில் ரஜினியின் சம்பளம் மட்டும் 100 முதல் 120 கோடி ரூபாய் இருக்கும் என தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக தர்பார் படத்திற்கு 108 கோடி ரூபாய் சம்பளம் வாங்கிய ரஜினி தற்போது அண்ணாத்த படத்திற்கு 120 கோடி சம்பளம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் மற்ற நடிகர்களின் சம்பளம் குறித்த தகவலும் கசிந்துள்ளது. அந்த வகையில் லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாராவிற்கு 5 கோடியும், கீர்த்தி சுரேஷிற்கு 2 கோடியும், நடிகைகள் குஷ்பு மற்றும் மீனா ஆகிய இருவருக்கும் 1 கோடியும் சம்பளமாக வழங்கப்பட்டுள்ளதாம்.

மேலும் விஸ்வாசம் படத்தில் கண்ணான கண்ணே பாடலை இசையமைத்து தேசிய விருதை தட்டிச் சென்ற இசையமைப்பாளர் இமானுக்கு அண்ணாத்த படத்தில் சுமார் 2 கோடி ரூபாய் சம்பளம் வழங்கப்பட்டு உள்ளதாம். முன்னதாக விஸ்வாசம் படத்திற்கு இசையமைப்பாளர் இமான் 1 கோடி ரூபாய் சம்பளம் வாங்கிது குறிப்பிடத்தக்கது.

annatte-movie-poster-fanmade
annatte-movie-poster-fanmade

அண்ணாத்த படத்தில் ரஜினி உட்பட அனைவருமே முன்னணி நடிகர்கள் என்பதால் அவர்களின் சம்பளத்தால் மட்டுமே படத்தின் பட்ஜெட் இந்த அளவிற்கு அதிகரித்துள்ளதாம். படத்தின் பட்ஜெட் அதிகமாக இருப்பதால் நிச்சயம் வசூலும் அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்