அண்ணாச்சியை காக்க வைத்த இயக்குனர்.. பாதி மெட்ராஸ் கையில் இருந்தும் லெஜண்டுக்கு வந்த சோதனை

Legend Annachi : தொழிலதிபராக இருக்கும் சரவணன் அண்ணாச்சி தன்னுடைய கடை விளம்பரத்தில் நடித்து வந்த நிலையில் தி லெஜண்ட் என்ற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். இந்த படம் அண்ணாச்சிகாகவே வரவேற்பு பெற்ற நிலையில் அவருடைய அடுத்த படத்திற்காக ரசிகர்கள் பெரிதும் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

இந்த சூழலில் அண்ணாச்சியையே காக்க வைத்திருக்கிறார் இயக்குனர் ஒருவர். அதாவது பட்டாசு, கொடி, எதிர்நீச்சல், காக்கி சட்டை போன்ற படங்களை இயக்கிய துரை செந்தில்குமார் தான் அண்ணாச்சியின் அடுத்த படத்தை எடுக்க இருக்கிறார். ஆனால் இப்போது இவர் சூரியை வைத்து கருடன் என்ற படத்தை எடுத்து வருகிறார்.

இந்த படத்தில் சசிகுமார், உன்னி முகுந்தன் போன்ற பலர் நடித்து வருகிறார்கள். வெற்றிமாறன் கதையில் தான் இப்படம் உருவாகி வருகிறது. இந்தப் படத்தின் படப்பிடிப்பில் இப்போது துரை செந்தில் குமார் பிஸியாக இருப்பதால் அண்ணாச்சியை காத்திருக்க சொல்லி உள்ளாராம்.

Also Read : ஓடவும் முடியல ஒளியவும் முடியல.. லெஜன்ட் அண்ணாச்சி தான் எங்களை காப்பாத்தணும்

அண்ணாச்சியையே காக்க வைத்த துரை செந்தில்குமார்

அதோடு அண்ணாச்சி இந்த புதுப்படத்திற்கு இன்னும் ஆபீஸ் போடவில்லையாம். இதற்காக வளசரபாக்கம் பக்கத்தில் இடம் தேடிக் கொண்டிருக்கிறாராம். பாதி மெட்ராஸ் அண்ணாச்சி கையில் தான் இருக்கிறது என பலரும் கூறி வரும் நிலையில் அவருடைய படத்திற்கு இவ்வளவு கால தாமதமா என்பது ஆச்சரியமாகத்தான் இருக்கிறது.

அண்ணாச்சி எதுவாக இருந்தாலும் நிதானமாகத்தான் செய்யக்கூடியவர். அதனால் தான் தொழிலில் இவ்வளவு பெரிய வளர்ச்சி அடைந்துள்ளார். அதேபோல் தி லெஜண்ட் படத்தின் ஹிட்டுக்குப் பிறகு மாஸான ஹிட் படத்தை கொடுக்க வேண்டும் என்பதற்காக அண்ணாச்சி பக்காவாக காய் நகர்த்தி வருகிறார்.

Also Read : கதை புடிச்சு போய் நாலு மடங்கு சம்பளத்தை அள்ளிக் கொடுத்த அண்ணாச்சி.. தனுஷ் இயக்குனருக்கு அடித்த ஜாக்பாட்