இணையத்தில் கசிந்த அண்ணாத்த ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ் தேதி.. கொண்டாட்டத்தில் ரசிகர்கள்

ரஜினிகாந்த் நடிப்பில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் திரைப்படம் தான் அண்ணாத்த. சிறுத்தை சிவா இயக்கி வரும் இந்த படத்தின் படப்பிடிப்புகள் பலமுறை தடைபட்டது குறிப்பிடத்தக்கது.

அண்ணாத்த படத்தின் ரிலீஸ் தேதியை சன் பிக்சர்ஸ் நிறுவனம் குறித்து விட்டது. வருகின்ற தீபாவளிக்கு நவம்பர் 4 ஆம் தேதி அண்ணாத்த திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்து விட்டனர்.

அண்ணாத்த அப்டேட் இல்லாமல் காத்துக்கொண்டிருந்த ரஜினி ரசிகர்களை குஷிப்படுத்தும் வகையில் இந்த அறிவிப்பு அமைந்துள்ளது. மேலும் அரசியல் சலசலப்புகளுக்கு பிறகு மீண்டும் ரஜினியின் படம் திரைக்கு வருவதால் இந்த படத்தின் மீது எதிர்பார்ப்பு எக்கச்சக்கமாக உள்ளது.

வடசென்னை டான் கதையம்சத்தில் உருவாகியிருக்கும் அண்ணாத்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ரிலீஸ் குறித்த தகவல் சன் பிக்சர்ஸ் வட்டாரங்களில் கசிந்துள்ளன. வருகின்ற ஆகஸ்ட் 12-ஆம் தேதி சிறுத்தை சிவாவின் பிறந்த நாளாம்.

இதனால் ஆகஸ்ட் 12-ஆம் தேதி அண்ணாத்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகும் என தெரிகிறது. அடுத்தடுத்து முன்னணி நடிகர்களான விஜய், அஜித், சூர்யா, கமல் போன்றோரின் புதிய படங்களின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் வெளியாகி அவர்களது ரசிகர்களை கொண்டாட வைத்தது.

ஆனால் ரஜினி ரசிகர்கள் மட்டும் எந்த ஒரு அப்டேட்டும் இல்லாமல் தேவுடு காத்துக் கொண்டிருந்தனர். தற்போது அவர்களின் கவலையை போக்கும் வகையில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் அண்ணாத்த பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட முடிவு செய்துள்ளது.

annaatthe-cinemapettai
annaatthe-cinemapettai

Next Story

- Advertisement -