விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சி அனைத்து விதமான சர்ச்சைகளுக்கு உள்ளாகி வருகிறது. முதல் சீசன் மூலம் பல நடிகர்களும் பிரபலம் அடைந்தனர். அதனால் சினிமாவில் எப்படியாவது ஜெயிக்க வேண்டும் என ஆசைப்படும் நடிகர்கள் என்ன ஆனாலும் சரி பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வேண்டுமென முடிவெடுத்து பல பிரபலங்களும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
முந்தைய பிக்பாஸ் சீசன்களை விட சமீபத்தில் ஒளிபரப்பான பிக்பாஸ் 4வது சீசன் தான் அதிகமான சர்ச்சைகளுக்கு உள்ளாகியுள்ளது. அதற்கு காரணம் பிக்பாஸில் கலந்துகொண்ட யாருமே உண்மையான நண்பர்கள் ஆகவே பழகவில்லை ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமான கருத்துக்களை முன் வைத்ததால் இவருக்குள் ஒற்றுமையை ஏற்படவில்லை.
ஆனால் பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்த பிறகு ஒரு சிலர் தனது தப்பை உணர்ந்து நண்பர்களாகவே பழகி வந்தனர். அனிதா சம்பத்க்கும் ஆரிக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் ஏகப்பட்ட கருத்து வேறுபாடுகள் காரணமாக பல சண்டைகளை போட்டுக் கொண்டனர். ஆனால் உண்மையான புரிதலுக்கு பிறகு இவர்கள் இருவரும் நண்பர்களாகவே தற்போதுவரை பழகிவருகின்றனர்.
ஆனால் தயாரிப்பாளர் ரவீந்திரன் அனிதா சம்பத் பற்றியும் ஆரியையும் பற்றியும் அவ்வப்போது ஏதாவது ஒரு கருத்தை முன்வைத்து வந்தார். அதனால் அனிதா சம்பத் அவருடன் செல்போனில் பேசிய ஆடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் தயாரிப்பாளர் ரவீந்திரன் ஒன்றுமில்லாத ஆரியை நான்தான் பேசிப்பேசியே வெற்றிபெறச் செய்தேன் என்ற அளவிற்கு பேசியுள்ளார். மேலும் ஆரி யின் உண்மையைப் பற்றி அடிக்கடி பெருமையாக பேசியதால் தான் வெற்றி பெற்றார் எனவும் கூறியுள்ளார். அதற்கு அனிதா சம்பத் அவர் உண்மையாக இருந்தார். அதனால் வெற்றி பெற்றார் நீங்கள் அவரைப் பற்றி பேசியதால் கிடையாது என ரவீந்திரனுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.
தற்போது ரவீந்திரன் பேசிய ஆடியோ வெளியானதால் ரசிகர்கள் பலரும் ஆரி உங்களால் வெற்றி அடைய வில்லை அவரது உண்மை முகத்தால் தான் வெற்றி அடைந்தார் எனக் கூறி வருகின்றனர். தற்போது இவர்கள் இருவரும் சமூக வலைதளங்களில் தங்களது கருத்துகளை பரிமாறிக் கொண்டு வருகின்றனர்.