வெள்ளிக்கிழமை, டிசம்பர் 13, 2024

பட வாய்ப்பு தருகிறேன் என தவறான உறவுக்கு அழைத்த நபர்.. விஜயசாந்தி ரேஞ்சுக்கு வெளுத்து வாங்கிய அனிதா சம்பத்

சன் டிவியில் செய்தி வாசிப்பாளராக இருந்த அனிதா சம்பத் தற்போது விஜய் டிவியின் முக்கிய அம்சமாக மாறி விட்டார். கடந்த பிக்பாஸ் நிகழ்ச்சி சீசன்4 நிகழ்ச்சியில் கலந்து கொண்டதற்கு பிறகு அவருக்கு நிறைய படவாய்ப்புகளை சீரியல் வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கின்றன.

ஆரம்பத்தில் அனைத்துக்கும் பிக் பாஸ் வீட்டுக்குள் நெகடிவ் விமர்சனங்கள் கிடைத்தது குறிப்பிட வேண்டிய ஒன்று. ஆனால் அதன் பிறகு அப்படியே அனைத்தையும் பாசிட்டிவ்வாக மாற்றி தற்போது விஜய் டிவியின் சொத்தாக மாறிவிட்டார்.

இப்படிப்பட்ட பிரபலங்களிடம் சமூக வலைதளங்களில் ரசிகர்கள் ஏதேனும் வம்பு செய்து கொண்டுதான் இருப்பார்கள். முன்னரெல்லாம் கண்டும் காணாமல் இருந்த பிரபலங்கள் இப்போதெல்லாம் உடனடியாக பதிலடி கொடுத்து விடுகின்றனர்.

வலைதளங்களில் பிரபலங்களுக்கு மட்டுமல்ல சாதாரணப் பெண்களுக்கு கூட பல பிரச்சினைகள் ஏற்பட்டு வருகிறது. அந்த வகையில் இளம்பெண் ஒருவரை தவறான விஷயத்திற்கு ஒரு நபர் அழைத்துள்ளார்.

அந்த பதிவை படித்த சம்பத்திற்கு பகிர்ந்துள்ளார் அந்தப் பெண்மணி. அதை அனிதா சம்பத் தன்னுடைய சமூக வலைதளப் பக்கங்களில் பகிர்ந்து, படவாய்ப்பு தருகிறேன் என இளம் பெண்கள் பலரையும் தவறான பாதைக்கு அழைக்கும் இந்த மாதிரி சிலர் இருக்கத்தான் செய்கிறார்கள்.

தயவு செய்து அனைவரும் பாதுகாப்பாக இருங்கள் என சமூக விஷயத்திற்கு குரல் கொடுத்த அனிதா சம்பத்துக்கு ரசிகர்கள் சமூக வலைதளங்களில் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.

anitha-sampath-cinemapettai
anitha-sampath-cinemapettai
- Advertisement -

Trending News