அதில் பிக்பாஸ் சீசன் 4 பங்கு பெற்ற அனிதா சம்பத் தற்போது திரைப்படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார். பிரபல செய்தி வாசிப்பாளராக இருந்தவர். அனிதா சம்பத் பிக்பாஸ் நிகழ்ச்சிக்காக தன்னுடைய வேலையை ராஜினாமா செய்துவிட்டு அந்த நிகழ்ச்சியில் பங்கு பெற்றார்.
சன் டிவியில் செய்தியாளராக இருப்பவர் முதலில் பாலிமர், நியூஸ் 7 போன்ற தொலைக்காட்சிகளிலும் செய்தியாளராக இருந்தவர். தற்போது பிபி ஜோடிகள் என்னும் ரியாலிட்டி ஷோவில் போட்டியாளராக பங்கு பெற்று வருகிறார். இதில் அவருடைய நடன திறமையை அனைவரும் பாராட்டுகிறார்கள். அனிதா சம்பத் தற்போது புதிய திரைப்படத்திற்காக தயாராகிறார்.
செய்தி வாசிப்பாளராக இருந்த போதே ஒரு சில திரைப்படங்களில் நடித்துள்ளார் தற்போது சீவி குமாரின் திருக்குமரன் என்டர்டெயின்மென்ட் தயாரிக்கும் திரைப்படமான படத்தில் நடித்திருக்கிறார்.
தற்போது சீ.வி .குமாரின் திருக்குமரன் என்டர்டெயின்மென்ட் தயாரிக்கும் திரைப்படமான ஜாங்கோ திரைப்படத்தில் நடித்திருக்கிறார். இத்திரைப்படத்தில் சசிகுமார் மிருணாளினி ரவி ,கருணாகரன், வேலுபிரபாகரன், அனிதா சம்பத் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய அனிதா சம்பத் சி.வி.குமார் திரைப்படம் என்றதுமே எந்தவித தயக்கமும் இன்றி சம்மதம் தெரிவித்து விட்டேன் என்று கூறினார்.
திரைப்பட வாய்ப்புகள் வந்தால் அதில் தன்னுடைய கதாபாத்திரத்தை பற்றி அதிகம் ஆலோசனை செய்வேன். ஆனால் இந்த திரைப்படத்தில் உடனடியாக ஒப்புக் கொண்டு விட்டேன். மேலும் இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையில் இத்திரைப்படம் மேலும் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெறும் என்று கூறியிருக்கிறார்.