ரஜினிக்கு ராகவா போல் கமலுக்கு சித்தார்த்.. இந்தியன் 2 ட்ரெய்லரில் புகழ்ந்து தள்ளிய சிஷ்யன்

Indian 2: கிட்டத்தட்ட ஐந்து வருடங்களுக்கு மேல் உருவாக்கப்பட்ட இந்தியன் 2 படப்பிடிப்பு தற்போது முடிவுக்கு வந்துவிட்டது. இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் கமல் நடிப்பில் உருவாகியுள்ள இந்தியன் 2 வருகிற ஜூலை 12ஆம் தேதி வெளிவர இருக்கிறது. நாட்டில் நடக்கும் லஞ்சம் ஊழலுக்கு எதிராக நியாத்து பக்கம் நிற்கும் இந்தியன் தாத்தாவாக களமிறங்கப் போகிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு ஆரம்பிக்கப்பட்ட நிலையில் இப்பொழுது வரை ஏகப்பட்ட பிரச்சினைகளையும் சர்ச்சைகளையும் சந்தித்த நிலையில் ஒரு வழியாக ரிலீசுக்கு கொண்டு வந்திருக்கிறார்கள். அந்த வகையில் லைக்கா எப்படியாவது இப்படத்தின் ப்ரமோஷனை பிரமாண்டமாக கொடுத்து வசூல் ரீதியாக லாபத்தை பார்த்து விட வேண்டும் என்று முடிவு பண்ணி விட்டார்.

சம்பவத்துக்கு தயாராக இருக்கும் இந்தியன் 2

அந்த வகையில் இன்று நடந்த ட்ரெய்லர் விழாவில் கமல், ஷங்கர், அனிருத், சித்தார்த் மற்றும் பலரும் கலந்து கொண்டார்கள். அப்பொழுது ஒவ்வொருவரும் இப்படத்தின் தாக்கத்தையும் அது எந்த அளவிற்கு மக்களிடம் ரீச் ஆகும் என்பதை பற்றியும் பேசி உள்ளார்கள். அதே மாதிரி சித்தார்த்துக்கு பொதுவாக கமல் நடிப்பும் படங்களும் ரொம்பவே பிடிக்கும் என்பதை பல பேட்டிகளில் கூறியிருக்கிறார்.

அந்த வகையில் அவருடன் நடிக்கும் வாய்ப்பை கொடுத்ததற்கு மிக மகிழ்ச்சி என்று நன்றிகளை தெரிவித்து இருக்கிறார். தாத்தா வராரு கதர விட போறாரு அது நிச்சயம் என்று சொல்லிய நிலையில் இப்ப இருக்கிற ஊழலுக்கு எதிராக குரல் கொடுக்கும் விதமாக இப்படத்தின் கதை நிச்சயமாக ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தும் என்பதை சித்தார்த் கூறியிருக்கிறார்.

இவரை தொடர்ந்து இப்படத்தின் ராக்ஸ்டார் ஆக ஜொலிக்கும் அனிருத் இந்த ஆண்டு ஒரு தரமான சம்பவம் ஏற்படுத்தும் வகையில் இந்தியன் 2 படம் அனைவரது மனதிலும் இடம் பிடிக்கும் என்பதை ஆணித்தரமாக கூறியிருக்கிறார். ஆனால் இந்தியன் படத்தில் ஏ ஆர் ரகுமான் இசையமைத்த பாடல் போல் இல்லை என்று ஏற்கனவே வெளிவந்த பாடல்கள் மூலம் பல கருத்துக்கள் கலவையாக வந்தது.

அதையெல்லாம் ஓவர் டேக் பண்ணும் அளவிற்கு படமும் அனிருத் இசையும் ரசிகர்களிடம் வரவேற்பை பெற வேண்டும். அந்த வகையில் ஏஆர் ரகுமான் இடத்தை பிடிப்பாரா அனிருத் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

இந்தியன் 2 படத்தின் அப்டேட்

Next Story

- Advertisement -