அபரிதமான வளர்ச்சி காட்டும் அனிருத்.. இப்பவே அவர் இடத்திற்கு துண்டை போடும் சின்னத்தம்பி

சென்சேஷனல் இசையமைப்பாளராக இருக்கும் அனிருத் தன்னுடைய 21 வைத்து வயதில் திரைப்பயணத்தை ஆரம்பித்தார். ஐஷ்வர்யா ரஜினிகாந்த் இயக்கி தனுஷ் நடித்த 3 படத்தில் இவர் இசையமைத்த ஒய் திஸ் கொலவெறி டி பாடல் மூலம் உலக அளவில் ரீச் ஆனார்.

ஆரம்ப நாட்களில் தனுஷ் நடித்த அல்லது தயாரித்த படங்களுக்கு மட்டுமே இசையமைத்து கொண்டிருந்த அனிருத்தின் வளர்ச்சி பின்னாட்களில் பிரம்மாண்டமாக அமைந்தது. விஜய், அஜித், கமல், ரஜினி படங்களுக்கு எல்லாம் மிக குறுகிய காலத்திலேயே இசையமைக்க தொடங்கிவிட்டார்.

Also Read: எல்லாம் இந்த அனிருத் செய்யும் வேலை.. கவிஞர்கள் பொழப்புக்கு உலைவைக்கும் 3 நடிகர்கள்

இப்போது ஹீரோக்களின் கால்ஷீட் கிடைத்தாலும் கூட அனிருத்தின் கால்ஷீட்டுக்கு காத்துக்கிடக்க வேண்டி இருக்கிறது. அந்த அளவுக்கு பிசியாக இருக்கிறார் இந்த இளம் இயக்குனர். இவர் ஒரு படத்திற்கு இசையமைத்தால் அந்த படத்தின் மொத்த ஆல்பமும் ஹிட் அடித்து விடுகிறது.

படத்தின் பாடல்கள், பி ஜி எம் , பின்னணி இசை என படம் ரிலீஸ் வரை தன்னுடைய இசையை செதுக்குகிறார் அனிருத். இதனாலேயே ஒவ்வொரு தயாரிப்பாளர்களும் அனிருத்தின் கால்ஷீட்டுக்காக தவம் கிடக்கின்றனர். இவரின் பாடல்கள் அத்தனையும் மில்லியன் வியூஸ்கள் வருகிறது.

Also Read: கழட்டி விடப்படும் ஏஆர் ரகுமான்.. ஆஸ்கர் நாயகனுக்கு இப்படி ஒரு நிலைமையா?

இப்போது அனிருத் இசைப்புயல் AR ரகுமானின் ரூட்டை பின்பற்றி ஒரு பிளான் போட்டு இருக்கிறார். அதாவது எல்லா பக்கங்களிலும் மியூசிக் ஷோ நடத்த திட்டமிட்டு இருக்கிறார். இந்த மாதம் சென்னையிலும், அடுத்த மாதம் கோயம்புத்தூரிலும் ஷோ நடக்க இருக்கிறது.

அனிருத் அடுத்த மாதம் லண்டனில் மிகப்பெரிய ஷோ ஒன்றை நடத்த இருக்கிறார். இந்த நிகழ்ச்சிக்கான முன்பதிவு ஆரம்பித்த அரை மணி நேரத்திலேயே முடிந்துவிட்டதாம். அவ்வளவு ரசிகர்களை கொண்ட அனிருத் AR ரகுமானை போல ஆஸ்கர் விருது வாங்கும் வாய்ப்பு இருக்கிறது என்று உறுதியாக சொல்லலாம்.

Also Read: அனிருத்தை தூக்கி வைத்துக் கொண்டாடும் தமிழ் சினிமா.. ஓரம் கட்டப்பட்ட யுவன்

Next Story

- Advertisement -