வியாழக்கிழமை, டிசம்பர் 12, 2024

ஏ.ஆர்.ரகுமானுடன் இணையும் அனிருத்.. பாலிவுட் பாட்ஷாவிற்காக பிரம்மாண்ட கூட்டணி!

ராஜா ராணி படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமாகி தெறி, மெர்சல், பிகில் என தொடர்ந்து வெற்றிப் படங்களை வழங்கியவர் இயக்குனர் அட்லி. இவர் தற்போது பாலிவுட் நடிகர் ஷாருக்கானை வைத்து இந்தியில் படம் ஒன்றை இயக்கவுள்ளார்.

ஷாருக்கான் தற்போது நடித்து வரும் பதான் படத்தின் படப்பிடிப்பை முடித்த பின்னர் அட்லி இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தில் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக, இப்படத்தின் நாயகியாக நயன்தாரா நடிக்க உள்ளதாகவும், இயக்குனர் தரப்பில் இருந்து பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில், ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்க உள்ள இப்படத்தில் இசை அமைப்பாளர் அனிருத் பாடல் ஒன்றைப் பாட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், விரைவில் இது குறித்த அறிவிப்பு வெளியாகும் எனவும் கூறப்படுகிறது.

anirudh ravichander
anirudh ravichander

இதெல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும் இப்பவே ரசிகர்கள் இது எந்தப் படத்தோட காப்பி என தேட ஆரம்பித்துவிட்டார்கள். இந்த தடவையாவது மாட்டிக்காதீங்க பாஸ்.

- Advertisement -

Trending News