வியாழக்கிழமை, டிசம்பர் 12, 2024

சிங்கப்பெண்ணில் எல்லையை மீறும் அன்பு, மலை போல் நம்பும் மகேஷ்.. கொத்தாக மாட்டிய ஆனந்தி

Singapenne: சன் டிவியில் ஒளிபரப்பாகும் சிங்க பெண்ணே சீரியலின் இந்த வார ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. தேவையில்லாமல் காயத்ரிக்கு உதவப் போகிறேன் என ஆனந்தி செய்த விஷயத்தால் இப்போது இருக்கும் இடமில்லாமல் தவித்துக் கொண்டிருக்கிறாள்.

காயத்ரிக்கு நடந்த விஷயத்தை வெளியில் சொல்லக்கூடாது என ஆனந்தி ரொம்பவும் உறுதியாக இருக்கிறாள். எப்படி பார்த்தாலும் ஆனந்தி ஹாஸ்டல் சுவர் ஏறி குதித்து உள்ளே வந்தது தப்பு. சரியான காரணம் தெரியாமல் ஆனந்தியை உள்ளே விட்டால் அது ஹாஸ்டலில் இருப்பவர்களுக்கு தவறான முன்னுதாரணமாக ஆகிவிடும் என்பதால் வார்டன் காரணம் சொல்லியே ஆக வேண்டும் என்கிறார்.

தன்னுடைய அம்மாவை மீறி எதுவும் செய்ய முடியாததால் ஆனந்தியை அன்புவின் வீட்டில் விட்டு வைக்கிறான் மகேஷ். ஆனந்தி வீட்டுக்குள் இருப்பது தெரியாமல் அன்பு அவனுடைய அம்மா மற்றும் தங்கச்சியை ஏமாற்ற படாத பாடு படுகிறான்.

எல்லையை மீறும் அன்பு, மலை போல் நம்பும் மகேஷ்

கில்லி பட ரேஞ்சுக்கு கடந்த வாரம் எபிசோடுகள் இருந்தது. தற்போது ஆனந்தி அடுத்து எங்கே இருக்கப் போகிறாள், காயத்ரியை பற்றி உண்மையை சொல்வாளா என்பது பெரிய எதிர்பார்ப்பாக இருக்கிறது. ஒருவேளை வீட்டுக்குள் அன்பு, ஆனந்தியுடன் மாட்டினால் அவனுடைய அம்மா ருத்ரதாண்டவம் ஆடி விடுவார்.

இந்த நிலையில் இன்று வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் மகேஷ், அன்பு விடம் ஆனந்தி இருக்கும் வரை அவளுக்கு எந்த பிரச்சனையும் இருக்காது அவன் கண்டிப்பாக என்னுடைய காதலை ஜெயிக்க வைத்து விடுவான் என நம்பிக்கையாக மித்ராவிடம் சொல்கிறான்.

அதே நேரத்தில் அன்பு ஆனந்தியை இவ்வளவு நெருக்கத்தில் வைத்துவிட்டு என்னால் என்னுடைய காதலை வெளிப்படுத்தாமல் இருக்க முடியவில்லை. நான் எல்லை மீறி விடுவேனோ, மகேஷுக்கு செய்து கொடுத்த சத்தியத்தை மீறி விடுவோமோ என பயமாக இருக்கிறது என்று புலம்புகிறான்.

அது மட்டும் இல்லாமல் அந்த ப்ரோமோ வீடியோவில் அன்புவின் சட்டையை அணிந்து கொண்டு அன்பு மாதிரி வீட்டை விட்டு வெளியேற ஆனந்தி முயற்சி செய்கிறாள். அந்த நேரம் பார்த்து அன்பு என நினைத்துக் கொண்டு அவனுடைய அம்மா பின்னால் இருந்து கூப்பிடுகிறார்.

இந்த வாரம் ஒருவேளை அன்புவும் ஆனந்தியும் அவனோட அம்மா கிட்ட கொத்தாக மாற்றுவதற்கு அதிக வாய்ப்பு இருக்கிறது. இந்த பிரச்சனையை அன்புவும் மகேஷும் சேர்ந்து எப்படி முடித்து வைக்கிறார்கள் என பொறுத்திருந்து பார்க்கலாம்,

- Advertisement -

Trending News