சிங்கப்பெண்ணில் செவரக்கோட்டைக்கு கிளம்பிய அன்பு ஆனந்தி.. மித்ராவின் திட்டத்தை நிறைவேற்ற காத்திருக்கும் சுயம்புலிங்கம்

Singapenne: சன் டிவியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் சிங்க பெண்ணே சீரியலில் ஆனந்தியின் பணக்கஷ்டத்திற்கு தீர்வு காண அன்பு கடுமையாக போராடிக் கொண்டிருக்கிறான். ஆனந்திக்கு எந்த வகையிலும் பணம் கிடைத்து விடக்கூடாது என்பதற்காக மித்ரா எல்லா விதமான சதி திட்டத்தையும் நிறைவேற்றி விட்டாள்.

யாருக்கும் தெரியாமல் மகேஷ் பணம் தந்து விடப் போகிறான் என்பதுதான் மித்ராவின் பெரிய கவலையாக இப்போது இருக்கிறது. ஆனந்தி படும் கஷ்டத்தை பார்க்க முடியாமல் தன்னுடைய வீட்டு பத்திரத்தை அடமானம் வைத்து லோன் வாங்கும் அளவிற்கு துணிந்து விட்டான்.

ஆனால் அன்பு எதிர்பார்த்த விஷயம் பேங்கில் நடக்கவில்லை. ஆனந்தி, எனக்காக இவ்வளவு பெரிய ரிஸ்க் எடுத்து ஏதாச்சும் பண்ணி அது உங்க அம்மாவுக்கு தெரிந்திட போது. அம்மாவையும் பிள்ளையையும் பிரிச்ச பாவம் எனக்கு வேண்டாம், நீங்க போயிடுங்க அன்பு என்று சொல்லி அழுகிறாள்.

மித்ராவின் திட்டத்தை நிறைவேற்ற காத்திருக்கும் சுயம்புலிங்கம்

அதே நேரத்தில் பேங்கிற்கு வரும் மகேஷ், ஆனந்தியின் நிலைமையை தெரிந்து கொள்கிறான். அன்புவைத் தேடி வந்து பத்து லட்சம் இருக்கும் பணப்பெட்டியை கொடுக்கிறான். அதுமட்டுமில்லாமல் என்னுடைய காதலை நீ ஆனந்த இடம் சேர்த்து விடுவாய் என்று எனக்கு நம்பிக்கை இருக்கிறது அன்பு என்று சொல்கிறான்.

இது அன்புக்கு பெரிய குற்ற உணர்ச்சியாக மாறிவிடுகிறது. அதே நேரத்தில் ஆனந்தியின் கஷ்டம் தீர்ந்தால் போதும் என அந்த பணத்தை வாங்கி கொள்கிறான். மகேஷ் அவன் தான் பணம் கொடுத்தான் என ஆனந்திக்கு தெரியக்கூடாது என சொல்கிறான்.

ஆனால் ஆனந்தி விடுவதாக இல்லை, இந்த பணத்தை எங்க வாங்கி வந்தீங்க என அன்புவிடம் கேட்டு கோபப்படுகிறாள். ஒரு வழியாக சமாதானம் ஆகி அன்பு மற்றும் ஆனந்தி செவரக்கோட்டைக்கு புறப்படுகிறார்கள்.

அன்பு மற்றும் ஆனந்தி ஹாஸ்டல் வாசலில் நின்று பேசுவதை மித்ரா கேட்டு விடுகிறாள். சுயம்பு லிங்கத்துக்கு போன் பண்ணி ஆனந்தி பணத்தோடு வருவதை தெரிவிக்கிறாள். சுயம்புலிங்கம் உடனே மூக்கனை அழைத்து ஆனந்தி சென்னையில் இருந்து இங்கு வருவதற்குள் நீ அழகப்பனிடம் கையெழுத்து வாங்கி விடு என்கிறான்.

எப்படியும் அழகப்பன் கையெழுத்து போடும் தருணத்தில் தான் அன்பு மற்றும் ஆனந்தி அங்கு போகப் போகிறார்கள் என்பது நன்றாக தெரிந்து விட்டது. எது எப்படியோ இந்த பணப் பிரச்சனை முடிந்த பிறகு ஆவது நான் தான் அழகன் என்று அன்பு சொல்வான் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள், அடுத்து இயக்குனர் என்ன ட்விஸ்ட் வைக்கப் போகிறார் என பொறுத்திருந்து பார்க்கலாம்.

- Advertisement -spot_img

Trending News