புதன்கிழமை, டிசம்பர் 11, 2024

தீயாக நடக்கும் ஓட்டு வேட்டை.. பிக்பாஸ் வரலாற்றை புரட்டிப் போடும் அர்ச்சனா

Archana-Biggboss 7: தற்போது சோசியல் மீடியாவை திறந்தாலே பிக்பாஸ் பற்றிய செய்திகள் தான் வைரலாகி கொண்டு இருக்கிறது. அதிலும் இறுதி நிலையை எட்டி விட்ட இந்த சீசனின் டைட்டில் வின்னர் யார் என்ற எதிர்பார்ப்பு அனைவருக்குமே இருக்கிறது.

அதன்படி தற்போது ஓட்டு நிலவரப்படி அர்ச்சனா தான் முன்னிலையில் இருக்கிறார். ஆனால் இதற்கு முன்பு கூட அவர் எப்போது நாமினேஷனிற்கு வந்தாலும் அவர்தான் அதிகபட்ச ஓட்டுகளை கைப்பற்றுவார். இதற்கு முக்கிய காரணம் அவருடைய இணைய கைக்கூலிகள் என்பது தற்போது வெளிப்படையாக தெரிகிறது.

அதாவது இப்போது சோஷியல் மீடியாவில் பல பிரபலங்கள் அவருக்காக ஓட்டு கேட்கும் வேலையில் இறங்கி இருக்கின்றனர். அதில் எப்போதும் இல்லாத திருநாளாக யூடியூபர் பிரஷாந்த் கூட அர்ச்சனாவுக்காக களம் இறங்கியுள்ளார்.

Also read: நோ சூடு, நோ சொரணை.. மாயாவுக்கு ஜால்ரா தட்டும் மிக்சர் பார்ட்டி

அது மட்டுமல்லாமல் அர்ச்சனாவின் பி.ஆர் டீம் ஓட்டு வேட்டையில் தீயாக வேலை செய்து கொண்டிருக்கிறது. ஆனால் விஜய் டிவியின் கணக்கு மாயாவை ஜெயிக்க வைப்பது தான் என்ற ஒரு தகவலும் பரவிக் கொண்டிருக்கிறது. இப்படி கடைசி நேரம் வரை இந்த சீசன் பரபரப்பாக தான் இருக்கிறது.

மேலும் அர்ச்சனா மட்டும் இந்த டைட்டிலை கைப்பற்றினால் அது பிக்பாஸ் வரலாற்றையே புரட்டிப் போட்ட நிகழ்வாக மாறும். ஏனென்றால் இதுவரை வைல்ட் கார்டு போட்டியாளராக வந்த யாரும் டைட்டிலை வென்றதே கிடையாது. இறுதி வரை வந்த போட்டியாளர்களும் இருந்துள்ளனர்.

ஆனால் இப்போதுதான் முதன் முறையாக ஒரு வைல்ட் கார்டு போட்டியாளர் இந்த அளவுக்கு ஆதரவை பெற்றுள்ளார். அந்த வகையில் அர்ச்சனா இந்த டைட்டிலை வென்று பிக்பாஸ் சரித்திரத்தை மாற்றுவாரா? என்பது இன்னும் சில நாட்களில் தெரிந்துவிடும்.

Also read: இறுதி கட்டத்தை எட்டிய பிக்பாஸ் 7.. ஓட்டிங்கில் முதல் 3 இடத்தை பிடித்தது இவர்கள் தான்

- Advertisement -

Trending News