வியாழக்கிழமை, டிசம்பர் 12, 2024

டாட்டா காட்டிய அழகன், அன்பும் இல்லை, மகேஷும் இல்லை.. சிங்கப்பெண்ணில் அதிரடி முடிவெடுத்த ஆனந்தி

Singapenne: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிங்க பெண்ணே சீரியலின் இன்றைய ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. சிங்கப்பெண் என்ற சீரியல் டைட்டிலுக்கு ஏற்றவாறு இந்த வாரம் ஆனந்தி அதிரடியாக சில விஷயங்களை செய்திருக்கிறாள்.

ஹோட்டலுக்கு சாப்பிட போன ஆனந்தி அங்கே ஒரு பெண், இன்னொருவனால் மிரட்டப்படுவதை பார்த்து அந்தப் பெண்ணுக்கு ஏதோ ஒரு ஆபத்து என அவர்கள் போகும் காரை பின் தொடர்கிறாள். அந்த இடத்திற்கு போன ஆனந்திக்கு மிகப்பெரிய அதிர்ச்சி காத்திருக்கிறது.

அந்த வில்லன் நிறைய பெண்களை கடத்தி வைத்திருக்கும் இடத்தில் தான் ஆனந்தியின் ஹாஸ்டல் தோழி காயத்ரியும் இருக்கிறாள். இன்று வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் ஆனந்தி ஒரு ஆளாக நின்று அத்தனை பேரையும் அடித்து தள்ளி எல்லா பெண்களையும் காப்பாற்றுவது போல் காட்டப்பட்டு இருக்கிறது.

அது மட்டும் இல்லாமல் காயத்ரியிடம் என்ன நடந்தது என கேட்கிறாள். அப்போது காயத்ரி எல்லா உண்மையையும் சொல்ல, எந்த போனை வைத்து உன்னை மிரட்டினானோ அதேபோல இவனை போட்டோ எடுத்து வெளியில் தலை காட்ட முடியாமல் செய்கிறேன் என சொல்கிறாள்.

சிங்கப்பெண்ணில் அதிரடி முடிவெடுத்த ஆனந்தி

இந்த வாரம் முழுக்க இந்த காயத்ரி பிரச்சனை வந்த போது ஆனந்தி அன்பு அல்லது மகேஷிடம் உதவி கேட்பாள் என பெரிய அளவில் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஆனந்தி சிங்கிளாக இந்த விஷயத்தை சமாளித்து விட்டாள்.

ஒரு வேளை ஆனந்திக்கு அவளுடைய பிரச்சனையை தான் தனியாக சமாளிக்க முடியாது போல. திடீரென அன்பு வந்து அதிரடி ஆக்சன் காட்சிகளில் இறங்குவான் என எதிர்பார்த்த சீரியல் ரசிகர்களுக்கு நேற்றைய எபிசோடு பெரிய ஏமாற்றம்தான்.

அது மட்டும் இல்லாமல் அன்பு வை பார்த்து நாலு நாள் ஆச்சு என ரசிகர்கள் ஏங்கும் அளவுக்கு இந்த வாரம் முழுக்க அன்புவின் காட்சிகள் இல்லாமலே போய்க் கொண்டிருக்கிறது. இதுபோன்ற பிரச்சனைகளுக்கு எல்லாம் ஆனந்தியின் மூளை பக்காவாக வேலை செய்கிறது.

இதே அறிவை உபயோகப்படுத்தினால் எப்பவோ ஆனந்தி அழகனை கண்டுபிடித்திருக்கலாம் என்பது சீரியல் ரசிகர்களின் பெரிய ஆதங்கமாக இருக்கிறது. அன்பு ஆனந்தியிடம் இனி நெருங்கக் கூடாது என முடிவெடுத்த பிறகு அழகன் யார் என அவன் சொல்வது கனவிலும் நடக்காத விஷயம்.

டாட்டா காட்டி விட்டுப் போன அழகனை தன்னுடைய சிங்கப்பெண் மூளையை உபயோகப்படுத்தி ஆனந்தி கண்டுபிடிக்கிறாளா என பொறுத்திருந்து பார்க்கலாம்.

- Advertisement -

Trending News