ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 15, 2024

சிங்க பெண்ணில் மகேஷ் உடன் ஹாஸ்டலை விட்டு வெளியேறும் ஆனந்தி.. அவ்ளோதான் அன்புவை முடிச்சு விட்டுட்டீங்க போங்க!

Singapenne: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிங்க பெண்ணே சீரியலின் இன்றைய ப்ரோமோ வெளியாகியிருக்கிறது. ஏற்கனவே சீரியலின் ஹீரோ அன்புவை 4 நாட்களாக காட்டாதது ரசிகர்களுக்கு பெரிய ஏமாற்றமாக இருக்கிறது.

அதுக்கும் மேலே ட்விஸ்ட் வைக்கும் அளவுக்கு இன்றைய ப்ரோமோ இருக்கிறது. ஹோட்டலில் அழுது கொண்டிருந்த பெண்ணை காப்பாற்றுவதற்காக பின் தொடர்ந்த ஆனந்தி அங்கே காயத்ரி இருப்பதையும் பார்த்து விடுகிறாள்.

ரவுடிகளை அடித்து உதைத்து கட்டிப்போட்டு அவர்கள் வாயாலேயே உண்மையை வர வைக்கிறாள். அதே நேரத்தில் ஆன்லைனில் கடன் வாங்குவது எப்படி ஒரு ஆபத்தில் சிக்க வைக்கும் என்பதை பற்றியும் பேசுகிறாள்.

இவ்வளவு தெளிவாக பேசிய ஆனந்தி அடுத்த காட்சியிலேயே கொஞ்சமும் யோசிக்காமல் ஒரு விஷயத்தை செய்து விடுகிறாள். காயத்ரியுடன் ஹாஸ்டலுக்கு வந்த ஆனந்தி அவளுடனே உள்ளே சென்று இருந்தால் எந்த பிரச்சனையும் கிடையாது.

மகேஷ் உடன் ஹாஸ்டலை விட்டு வெளியேறும் ஆனந்தி

அதை விட்டுவிட்டு காயத்ரியை உள்ளே போக சொல்லிவிட்டு ஆனந்தி சுவர் ஏறி குதிக்கிறாள். சரியாக ஆனந்தி சுவற்றில் ஏறி குதிக்கும் நேரத்தில் வார்டன் லைட்டை ஆன் செய்துவிட்டு அந்த இடத்திற்கு வருகிறார். இனி ஆனந்தி என்ன காரணம் சொல்லினாலும் ஒரு ஹாஸ்டலில் சுவர் ஏறி குதித்து உள்ளே போவது என்பது மன்னிக்க முடியாத குற்றம்.

ஆனந்தியை சரியான நேரத்தில் மாட்ட வைத்ததில் மித்ரா ரொம்பவே சந்தோஷப்படுகிறாள். ஆனந்தி செய்த எத்தனையோ விஷயத்தை பொறுத்துக் கொண்ட வார்டனுக்கு இது பெரிய கோபத்தை கொடுக்கிறது. இன்று வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் நீ உடனே ஹாஸ்டலை விட்டு வெளியேற வேண்டும் என வார்டன் சொல்கிறார்.

அது மட்டும் இல்லாமல் உன்னை மகேஷ் உடன் அனுப்பி வைக்கப் போகிறேன் என சொல்கிறார். இந்த விஷயம் ஆனந்தியை விட மித்ராவுக்கு ரொம்பவே அதிர்ச்சியை கொடுக்கிறது. ஆனந்தி மற்றும் மித்ரா இருவரும் இணைந்து வார்டனை சமாதானப்படுத்துவது போல் காட்டப்பட்டு இருக்கிறது.

தன்னுடைய முடிவில் பின்வாங்காத வார்டன் ஒரு வேளை ஆனந்தியை மகேஷ் உடன் அனுப்பி வைத்தால் மகேஷ் அடுத்து என்ன செய்வான் என்பது பெரிய கேள்விக்குறியாக இருக்கிறது. ஒரு வேளை ஆனந்தியை அவனுடைய வீட்டிற்கு அழைத்து சென்றாள் அவனுடைய அப்பா அம்மா எந்த மாதிரியான ரியாக்ஷனை கொடுப்பார்கள் என தெரியவில்லை. சரியான நேரத்தில் அன்புவின் ஆதரவு இல்லாததால் ஆனந்தி எந்த மாதிரியான முடிவு எடுக்கப் போகிறாள் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்

- Advertisement -

Trending News