30 கிலோ உடல் எடை குறைத்த ரகசியத்தை வெளியிட்ட ஆனந்தி.. சிக்குன்னு இருக்கும் வைரல் புகைப்படம்

தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்குவதன் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானவர் ஆனந்தி அஜய். இவர் கிட்டத்தட்ட விஜய் டிவி, ஜீ தமிழ், கலைஞர் தொலைக்காட்சி என அனைத்து தொலைக்காட்சிகளிலும் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார். அதன் பிறகு மானாட மயிலாட சீசன் 7 மற்றும் ஜோடி நம்பர் 1 சீசன் 6 கலந்து கொண்டார். இதில் ஜோடி நம்பர் 1 சீசன் 6 டைட்டிலையும் வெற்றி பெற்றார்.

அதன்பிறகு கார்த்திகைப் பெண்கள் ,கள்ளிக்காட்டு பள்ளிக்கூடம் மற்றும் கனா காணும் காலங்கள் ஆகிய சீரியல்களில் நடித்தார். அதிலும் இவருக்கு கனா காணும் காலங்கள் சீரியல் நல்ல வரவேற்பை பெற்றுக் கொடுத்தது.

பின்பு ரௌத்திரம், damaal-dumeel, மீகாமன் மற்றும் தாரை தப்பட்டை போன்ற படங்களில் குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்தார். அதுவும் தாரை தப்பட்டை திரைப்படத்தில் இவர் தெருக்கூத்து நாயகியாக நடித்து இருப்பார். இப்படம் இவருக்கு ஓரளவிற்கு வரவேற்பைப் பெற்றுக் கொடுத்தது.

சமீபத்தில் இவர் உடல் எடை மிகவும் அதிகமாக இருக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலானது. ஆனால் ஆனந்தி அஜய் கர்ப்பமாக இருக்கும் போது உடல் எடை அதிகமாக இருந்ததாக கூறினார். அதன் பிறகு உடற்பயிற்சியை கொஞ்சம் கொஞ்சமாக செய்து உடல் எடையைக் குறைத்து வந்ததாக கூறியுள்ளார். கிட்டத்தட்ட 30 கிலோ உடல் எடையை குறைத்ததாக கூறியுள்ளார்.

anandhi ajay
anandhi ajay

மேலும் உடனே உடல் எடை குறைப்பது சாத்தியமில்லாதது ஒன்று. முதலில் படிக்கட்டு ஏறுதல் போன்ற உடற்பயிற்சிகளை செய்ய வேண்டும் அதன் பிறகு சாதம் மட்டும் எடுத்துக் கொள்ளாமல் கேழ்வரகு, கம்பு போன்ற உணவுகளை தினம்தோறும் சாப்பிட்டு வந்தால் உடற்பயிற்சி செய்யும் போது குறைந்த நாட்களிலேயே உடல் எடை குறையும் என கூறியுள்ளார். தற்போது உடல் எடையை குறைத்துள்ள புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.