புதன்கிழமை, நவம்பர் 13, 2024

பாக்கியா ஹோட்டலில் தில்லாலங்கடி வேலை பார்க்கும் ஆனந்த்.. சூழ்ச்சி செய்த கோபிக்கு கிடைக்கும் முதல் வெற்றி

Bhakkiyalakshmi Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாக்கியலட்சுமி சீரியலில், பாக்கியா எடுத்திருக்கும் ஆர்டர் நல்லபடியாக முடிக்க வேண்டும் என்று பிளான் பண்ணி ஒவ்வொரு விஷயத்தையும் பார்த்து பார்த்து செய்து வருகிறார். அந்த வழியில் ஈஸ்வரி வந்து அதைத் தொடங்கி வைத்தால் நன்றாக இருக்கும் என்று பாக்கியா ஆசைப்படுகிறார். ஆனால் ஈஸ்வரியோ நான் வரவில்லை, நீயே பார்த்துக்கோ எல்லாம் நல்லபடியாக நடக்கும் என்று ஒதுங்குகிறார்.

இதை பார்த்த பாக்கியா, அத்தையை இப்படியே விட்டு விடக்கூடாது இல்லை என்றால் தனிமையாக இருந்த ரொம்பவே பீல் பண்ணுவாங்க என நினைக்கிறார். அதற்காக அத்தை தான் எல்லாத்தையும் முன்னே இருந்து எல்லா ஏற்பாடுகளையும் பண்ண வேண்டும் என்பதற்காக ஈஸ்வரியை வலுக்கட்டாயமாக ஹோட்டலுக்கு கூட்டிட்டு போகிறார்.

அங்கே போனதும் கணவரின் புகைப்படத்தை பார்த்து வணங்கிய பின்பு ஈஸ்வரி அங்க நடக்கும் எல்லா விஷயத்தையும் பார்த்துக் கொண்டிருக்கிறார். பிறகு பாக்யா, ஈஸ்வரியை கூப்பிட்டு அடுப்பை பற்ற வைத்து துவங்கி வைக்க வேண்டும் என்று சொல்கிறார். அதற்கு தயக்கத்துடன் ஈஸ்வரி போன நிலையில் பாக்யாவிற்காக அனைத்தையும் செய்து முடித்து விட்டார்.

அடுத்ததாக ஈஸ்வரி அங்கு இருந்து கொண்டு பாக்யா செய்யும் அனைத்து வேலைகளையும் பார்த்துக் கொண்டிருக்கிறார். அப்பொழுது பாக்கியா நிற்கக் கூட நேரமில்லாமல் பிசியாக வேலை பார்ப்பதை பார்த்து ஈஸ்வரி பாக்யா படும் கஷ்டத்திற்கு நிச்சயம் ஒரு விடிவு காலம் பிறக்க வேண்டும் என்று மனதிற்குள் நினைத்துக் கொள்கிறார்.

இதனை அடுத்து அந்த சமையலை நல்லபடியாக முடித்து விட்டார். அதை கொடுக்க வேண்டிய இடத்திற்கு கொண்டு போய் சேர்ப்பதற்கு எல்லாத்தையும் தயாராக வைத்து விட்டார். அடுத்ததாக ஹோட்டலுக்கு சாப்பிட வருபவர்களுக்கு சரியான முறையில் சாப்பாட்டை கொடுத்து விடுங்கள் என்று கோபி அனுப்பின ஆனந்திடம் எல்லா பொறுப்பையும் ஒப்படைத்து விட்டு பாக்கியா போகிறார்.

இதற்கு இடையில் ஈஸ்வரி நான் வீட்டுக்கு போய் ரெஸ்ட் எடுக்கிறேன் என்று கிளம்புகிறார். அப்பொழுது பாக்யாவின் தோழர் பழனிச்சாமி வந்த பொழுது நான் கொண்டு போய் விடுகிறேன் என்று ஈஸ்வரியை காரில் கூட்டிட்டு வீட்ல போய் விடப் போகிறார். அடுத்ததாக பாக்யாவும் எல்லா ஆர்டரையும் எடுத்துக்கொண்டு வெளியே கிளம்பி விடுகிறார்.

ஆனால் இதையெல்லாம் பார்த்த கோபி அனுப்பி வைத்த ஆனந்த் மனதிற்குள்ளே நீங்க என்ன பண்ணினாலும் இன்னைக்கு நீங்க அவமானப்பட்டு காரியமெல்லாம் சொதப்ப போகிறது என்று மனதிற்குள்ளே புலம்புகிறார். அப்படி பாக்கியா அவமானப்படும் அளவிற்கு அந்த ஆனந்த் ஏதோ ஒரு தில்லாலங்கடி வேலையை பார்த்து இருக்கிறார் என்பது மட்டும் நன்றாக புரிகிறது. அந்த வகையில் இதற்கு தான் ஆசைப்பட்டேன் என்பதற்கு ஏற்ப கோபி செய்த சூழ்ச்சியில் பாக்யா சிக்கிக் கொண்டு கோபிக்கு முதல் முறையாக வெற்றி கிடைக்கப் போகிறது.

- Advertisement -spot_img

Trending News