சனிக்கிழமை, டிசம்பர் 14, 2024

முக்கியமான ஆதாரத்துடன் சிக்க போகும் மித்ரா.. பரபரப்பான திருப்பங்களுடன் சிங்கப்பெண்ணே சீரியல்

Singapenne serial: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிங்கப்பெண்ணே சீரியலில் தில்லை இண்டஸ்ட்ரீஸ் 25 ஆம் ஆண்டு விழா கொண்டாட்டத்தின் போது ஆனந்தி மற்றும் அரவிந்தை எப்படியாவது அசிங்கப்படுத்தி கம்பெனியை விட்டு துரத்த வேண்டும் என மித்ரா திட்டமிட்டு இருந்தாள். கடைசியில் அவள் போட்ட திட்டத்தை அவளே மற்றும் அளவுக்கு அங்கு சம்பவங்கள் நடந்து விட்டது.

மயக்கமடைந்த நிலையில் படுத்து கிடந்த ஆனந்தியின் பக்கத்தில் மகேஷ் படுத்திருப்பதை பார்த்து மித்ராவுக்கு தலையே சுத்தி விட்டது. இந்த கோலத்தில் இவர்கள் இருவரையும் பார்த்தால் தன்னுடைய திட்டம் அத்தனையும் காலி ஆகிவிடும் என்பதை புரிந்து கொண்ட மித்ரா, உடனே ஆனந்தியை கை தாங்கலாக தூக்கிக் கொண்டு போய் ஒரு புல்வெளியில் படுக்க வைத்து விட்டாள்.

அந்த இடத்திற்கு வந்த மித்ராவின் அம்மா என்னுடன் ஏதோ பேச வேண்டும் என்று சொல்லிவிட்டு எங்கே போனாய் என்று கோபமோடு கேட்கிறார். அதற்கு மித்ரா அரவிந்த் பார்ட்டியில் அதிகமாக குடித்து விட்டதாகவும், அவனை சமாளிக்கவே நேரம் அதிகமாகி விட்டதாகவும் அரவிந்த் மீது கெட்ட எண்ணம் வரும் அளவுக்கு பேசுகிறாள். ஆனால் மித்ராவின் அம்மா சத்யா அரவிந்த் அப்படிப்பட்ட ஆள் இல்லை பார்ட்டி என்றால் அப்படித்தான் இருக்கும் என சொல்லி முடித்து விடுகிறார்.

மித்ரா மற்றும் அவளுடைய அம்மா சத்யா அந்த இடத்தை விட்டு நகர்ந்த உடனேயே ஆனந்திக்கு மயக்கமும் தெளிந்து விடுகிறது. செடியின் மறைவில் இருந்து வெளியே வரும் ஆனந்தியை, அன்பு ஆனந்தியின் தோழிகள் பார்த்துவிடுகிறார். மயக்கமான நிலைமையில் இருக்கும் ஆனந்தியை ஆட்டோ பிடித்து அவள் தங்கியிருக்கும் ஹாஸ்டலுக்கு அழைத்துப் போகிறார்கள். பின்னாடியே அவர்களுடைய பாதுகாப்பிற்காக அன்பும் கூடவே செல்கிறான்.

பரபரப்பான திருப்பங்கள்

ஹாஸ்டலுக்கு போன ஆனந்திக்கு அடுத்த நாள் காலையில் பயங்கரமான காய்ச்சல் அடிக்கிறது. அடுத்த நாள் அவளுடைய தோழிகள் கைதாங்களாக அவளை அழைத்துக் கொண்டு பாத்ரூமுக்கு கூட்டிக் கொண்டு போகிறார்கள். இதை பார்த்த மித்ராவுக்கு ரொம்பவும் குற்ற உணர்ச்சியும் ஆகிவிடுகிறது. உன்னையும் அரவிந்தையும் இந்த கம்பெனியை விட்டு தான் தொடக்க வேண்டும் என்று நினைத்தேனே தவிர இந்த நிலைமையில் பார்க்க வேண்டும் என நினைக்கவில்லை என்று புலம்புகிறாள்.

ஆனந்தியின் பரிதாபமான நிலையை கண்டு மித்ரா மனம் மாறுவது போல் காட்டப்பட்டாலும், மயக்கமடைந்த நிலையில் இருந்த மகேஷ் ஆனந்தியிடம் அத்துமீறியது போல் நேற்றிலிருந்து காட்டப்பட்டு வருகிறது. உண்மையிலேயே அப்படி ஒரு சம்பவம் நடந்திருக்குமா, அல்லது பரபரப்பை கிளப்புவதற்காக இப்படி ஒரு ஹிந்து கொடுக்கிறார்களா என்று இனிமேல் தான் தெரியும். இதற்கு இடையில் மித்ரா கையில் போட்டிருந்த கைச்செயின் உடைய ஒரு பகுதி ஆனந்தியின் புடவையிலேயே சிக்கிக் கொண்டிருக்கிறது. இது கண்டிப்பாக மித்ராவுக்கு எதிரான ஆதாரமாக திரும்ப நிறையவே வாய்ப்பு இருக்கிறது.

 

 

 

- Advertisement -

Trending News