புதன்கிழமை, டிசம்பர் 11, 2024

53 வயது நடிகருடன் காட்டிய ஓவர் நெருக்கம்.. சம்பளம் வாங்காமல் ஐட்டம் டான்ஸ் ஆடிய நடிகை

கோலிவுட்டில் பல திரைப்படங்களில் நடித்திருக்கும் அந்த உயர்ந்த நடிகைக்கு இப்போது சரிவர வாய்ப்புகள் எதுவும் கிடைக்கவில்லை. அதனாலேயே கிடைக்கும் கிளாமர் கதாபாத்திரங்களில் எல்லாம் அவர் நடித்து வருகிறார். அது மட்டுமல்லாமல் ஒரு பாடலுக்கு கூட குத்தாட்டம் போடும் லெவலுக்கு அவர் இறங்கி இருக்கிறார்.

அதிலும் தற்போது வெளியாகி இருக்கும் அந்த பெரிய நடிகரின் படத்தில் நடிகை ஆடிய ஐட்டம் டான்ஸ் பற்றிய பேச்சு தான் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஏனென்றால் படு கிளாமராக அந்த படத்தில் குத்தாட்டம் போட்ட நடிகை அதற்காக சம்பளமே வாங்கவில்லையாம். இது பற்றி விசாரித்துப் பார்த்ததில் முக்கிய சமாச்சாரமும் அம்பலமாகி உள்ளது.

Also read: மவுஸ் இருக்கும்போது பங்களா காருனு வாங்கிப்போம்.. அட்ஜஸ்ட்மென்ட்க்கு டாப் நடிகை விரிக்கும் வலை

அதாவது அந்த 53 வயது ஹீரோவுடன் நடிகை மிகவும் நெருக்கம் காட்டுகிறாராம். நடிகர் பற்றி எப்போதுமே பல கிசுகிசுக்கள் வெளிவந்து கொண்டு தான் இருக்கும். அதில் லேட்டஸ்ட்டாக இந்த நடிகையுடன் அவர் நெருக்கம் காட்டுவது தான் அக்கட தேசத்தில் பெரிய அளவில் கிசுகிசுக்கப்பட்டு வருகிறது.

அதிலும் நடிகருக்காகவே சம்பளம் வாங்காமல் ஆடியிருக்கிறார் அந்த நடிகை. இந்த விவகாரம் தற்போது நடிகரின் மனைவி காதுக்கும் சென்று இருக்கிறது. இருந்தாலும் இது பற்றி வாய் திறக்காமல் அவர் மௌனம் காத்து வருகிறார். ஆனால் எப்பொழுது வேண்டுமானாலும் இந்த விஷயம் குடும்பத்தில் பூகம்பத்தை கிளப்பும் என்றும் பேசப்பட்டு வருகிறது.

ஏற்கனவே நடிகையின் காதல் வலையில் சிக்கிய பிரபலங்களின் லிஸ்ட் நீண்டு கொண்டே போகும். அதில் தற்போது இந்த மூத்த நடிகரும் இணைந்து இருக்கிறார். இது எல்லாம் சில காலம் வரை தான். அடுத்ததாக எந்த நடிகர் நடிகையின் வலையில் சிக்குவாரோ என்று திரை உலகில் பலரும் சத்தம் இல்லாமல் பேசி வருகின்றனர்.

Also read: டாப் நடிகருக்காக தாராளம் காட்டிய மனைவி.. கொதித்துப்போன கணவன், நடக்கப்போகும் விவாகரத்து

- Advertisement -

Trending News