ரஜினியை மரியாதை இல்லாமல் திட்டிய பிரபல நடிகை.. பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வைத்த ரசிகர்கள்

தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோக்களில் யாருக்கும் இல்லாத அளவுக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கு மிகப்பெரிய அளவில் ரசிகர்கள் கூட்டம் இருப்பது அனைவரும் அறிந்த ஒன்றுதான். கிட்டத்தட்ட மூன்று தலைமுறைகளாக நம்பர் ஒன் ஹீரோவாக இருக்கும் ரஜினிக்கு இன்றுவரை அவருடைய ரசிகர்கள் கொடுக்கும் வரவேற்பு எந்த அளவுக்கும் குறையவில்லை. மேலும் 2000ஆம் ஆண்டின் தொடக்கத்தில் தமிழ்நாட்டை யார் ஆள வேண்டும் என்பதையே அவர் தான் முடிவு செய்யும் அளவுக்கு செல்வாக்கு இருந்தது.

இன்றுவரை ரஜினியின் ஒவ்வொரு படங்களுக்கும் அவருடைய ரசிகர்கள் கொடுக்கும் வரவேற்பும், வெற்றியும் ஒட்டுமொத்த இந்திய சினிமாவையும் பிரமிக்க வைக்கும் ஒன்றாக தான் இருக்கிறது. ரஜினிக்கு இருக்கும் செல்வாக்குகளினால் அவருடைய படங்களில் வில்லனாக நடிக்கவே பல நடிகர்கள் பயந்து இருக்கின்றனர். திரைப்படங்களில் அவரை எதிர்த்து பேசவே பயப்படும் அளவிற்கு அவருடைய ரசிகர்கள் இருந்தார்கள்.

Also Read:டாப் இயக்குனருடன் பல கோடி லாபத்தை பார்க்க கமல் தீட்டிய பிளான்.. வேறு வழியில்லாமல் ஓகே சொன்ன ரஜினி!

நடிகர்களுக்கே இந்த நிலைமை என்றால் அவருக்கு வில்லியாக நடிக்கும் நடிகைகளின் நிலைமை அதைவிட மோசமாக தான் இருந்தது. ரஜினிக்கு ஈடு கொடுக்கும் அளவிற்கான ஒரு வில்லி என்றால் அது படையப்பாவின் நீலாம்பரி தான். படையப்பா படத்தின் ரிலீஸின் போதெல்லாம் தியேட்டர் ஸ்கிரீன் கிழிக்கப்பட்டதும், ரம்யாகிருஷ்ணன் வெளிநாடு சென்றதும் அனைவரும் அறிந்தது தான்.

இதைப்போலவே மற்றொரு நடிகையும் திரைப்படத்தில் ரஜினிக்கு வில்லியாக நடித்துவிட்டு ரசிகர்களிடம் படாதபாடுப்பட்டிருக்கிறார். 1997 ஆம் ஆண்டு இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில் ரஜினி நடித்த திரைப்படம் அருணாச்சலம். இந்த படம் மிகப்பெரிய அளவில் ஹிட் அடித்தது. இதில் ரகுவரன், வி.கே.ராமசாமி போன்ற வில்லன்கள் இருந்தாலும் யாராலும் மறக்க முடியாதது வடிவுக்கரசியை தான்.

Also Read:மருதநாயகம் போல் கிடப்பில் போடப்பட்ட படம்.. மீண்டும் கதையை சொல்ல சொன்ன சூப்பர் ஸ்டார்

கூன் விழுந்த கிழவியாக நடித்திருந்த வடிவுக்கரசி ரஜினியை பேசுவதும், மிரட்டுவதும் திரையில் பார்க்க ரொம்பவே பயமாக இருக்கும். வடிவுக்கரசிக்கு இதுபோன்ற நடிப்பு ஒன்றும் புதிதல்ல. முதல் மரியாதை திரைப்படத்தில் நடிகர் திலகம் சிவாஜி கணேசனையே அந்த பாடுபடுத்தி எடுத்தவர் இவர். ஆனால் ரஜினி ரசிகர்களால் தான் இதை தாங்கி கொள்ள முடியவில்லை.

இந்த படம் ரிலீசிற்கு பிறகு வடிவுக்கரசி ரெயில் வண்டியில் வருவதை தெரிந்து கொண்ட ரஜினி ரசிகர்கள் தண்டவாளத்தில் படுத்து கொண்டு ரயிலை மறித்து இருக்கிறார்கள். பின்னர் வடிவுக்கரசி சென்று அவர்களிடம் ரஜினியை பேசியது தப்பு தான் என மன்னிப்பு கேட்ட பிறகு விட்டதாக அவரே ஒரு பேட்டியில் சொல்லியிருக்கிறார்.

Also Read:நீலாம்பரியாக நடிக்க இருந்த 2 கதாநாயகிகள்.. கேஎஸ் ரவிக்குமார் உடைத்த படையப்பா சீக்ரெட்

 

Next Story

- Advertisement -