அருண் விஜய்க்கு பின் லக்கில்லாத நடிகர்.. அப்பாக்கள் பெரிய பிஸ்தாவாக இருந்தும் பயனில்லை

சினிமாவை பொருத்தவரையில் வாரிசு நடிகர்களின் வரவு ஒன்றும் புதிதல்ல. ஆனால் அவர்களில் முன்னணி ஹீரோ என்ற அந்தஸ்து ஒரு சிலருக்கு மட்டுமே கிடைத்திருக்கிறது. சில வாரிசுகளின் அப்பாக்கள் திரையுலகை ஆட்சி செய்தாலும் மகன்களுக்கு அதிர்ஷ்டம் என்பது எட்டா கனியாக தான் இருக்கிறது.

அந்த வகையில் பல வருடங்களாக நடித்து வரும் அருண் விஜய்யை ஒரு காலத்தில் அதிர்ஷ்டம் இல்லாத நடிகர் என்றுதான் கூறினார்கள். ஏனென்றால் அவர் நடித்த பல திரைப்படங்கள் ரசிகர்களை பெரிய அளவில் கவரவில்லை. ஆனாலும் அவர் முயற்சியை கைவிடாமல் கடின உழைப்புடன் நடிக்க ஆரம்பித்தார். இத்தனைக்கும் அவருடைய அப்பா விஜயகுமார் சினிமாவில் எவ்வளவு பெரிய நடிகர் என்பது அனைவருக்கும் தெரியும்.

Also read: சரக்கடித்து மட்டையான இயக்குனர்.. சூட்டிங்கில் ஏற்பட்ட குழப்பம், காப்பாற்றி விட்ட சிவகுமார்

ஆனாலும் அருண் விஜய்க்கு சரியான அங்கீகாரம் கிடைக்கவில்லை. அதன் பிறகு அவருடைய திறமைக்கு ஒரு பலன் கிடைத்தது. தற்போது அவர் நன்றாகவே சினிமாவில் வளர்ந்து வருகிறார். அந்த வரிசையில் நடிகர் சிபியும் ஒரு அதிர்ஷ்டம் இல்லாத நடிகராக இருக்கிறார். ஒரு காலத்தில் வில்லன், ஹீரோ என கலக்கி வந்த சத்யராஜ் இப்போது குணச்சித்திர வேடங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.

ஆனால் அவரின் மகனான சிபிராஜ் இன்னும் ஒரு சூப்பர் ஹிட் வெற்றிக்காக போராடிக் கொண்டிருக்கிறார். ஆனால் அவர் நடிப்பில் வெளிவந்த நாய்கள் ஜாக்கிரதை, வால்டர், சத்யா போன்ற திரைப்படங்கள் விமர்சன ரீதியாக அவருக்கு பாராட்டுகளை பெற்றுக் கொடுத்தது. ஆனால் வசூலில் பெரிய அளவில் சாதனை பெறவில்லை.

Also read: டபுள் ஹீரோ நடிகர் என முத்திரை குத்தப்பட்ட 5 நடிகர்கள்.. இன்னும் தனியாக ஹிட் கொடுக்க முடியாத அழகர் ஜெய்

இதனால் அவர் வில்லன், செகண்ட் ஹீரோ போன்ற கதாபாத்திரங்களில் கூட நடித்துப் பார்த்தார். ஆனால் அவருக்கு எதுவுமே ஒர்க்அவுட் ஆகவில்லை. அந்த வகையில் திறமை இருந்தும் கூட இவருக்கு அதிர்ஷ்டம் கைகூடவில்லை என்பதுதான் நிதர்சனம். இருப்பினும் அவர் மனம் தளராமல் திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

தற்போது அவர் நடிப்பில் ரேஞ்சர் என்ற திரைப்படம் உருவாகி வருகிறது. அதைத்தொடர்ந்து அவர் ஏற்கனவே நடித்த மாயோன் திரைப்படத்தின் அடுத்த பாகமும் ஆரம்பிக்கப்பட இருக்கிறது. இந்த படங்களை தான் அவர் மலை போல் நம்பி இருக்கிறார். அந்த வகையில் அப்பாக்கள் மிகப்பெரிய இடத்தை பிடித்திருந்தாலும் அவர்களின் வாரிசுகள் இன்னும் போராடிக் கொண்டுதான் இருக்கின்றனர்.

Also read: அஜித்-விஜய்யால் அல்லோலப்படும் டாப் இயக்குனர்கள்.. ஈகோவால் அழியும் தமிழ் சினிமா

Next Story

- Advertisement -