அஜித் போலவே 80களில் இருந்த நடிகர்.. இரண்டு பேருக்குள் இப்படி ஒரு ஒற்றுமையா?

பொதுவாக அஜித் எந்தப் பிரஸ் மீட் நிகழ்ச்சியிலும் கலந்து கொள்வதில்லை. அதுமட்டுமின்றி சமூக வலைத்தளங்களிலும் அவர் இடம் பெறவில்லை. அஜித்தின் குடும்பத்தில் உள்ளவர்களும் சமூக வலைத்தளங்களில் இருந்து விலகி உள்ளனர். ஆனால் இப்போது அஜித்தின் புகைப்படங்கள் அதிகம் இணையத்தில் வெளியாகி வருகிறது.

மேலும் இப்போது மகிழ்திருமேனி, அஜித் கூட்டணியில் உருவாகும் ஏகே 62 படத்தின் அப்டேட் எப்போது வரும் என ரசிகர்கள் காத்திருக்கிறார்கள். இந்நிலையில் அஜித் தன்னுடைய சொந்த விஷயங்களை மறைமுகமாக வைத்திருந்தாலும் அவரது ரசிகர்கள் அஜித்தை கொண்டாடி வருகிறார்கள். இப்போது அஜித்தை போலவே 80களில் ஒரு நடிகர் இருந்தார்.

Also Read : ஸ்டண்ட் மாஸ்டரிடம் அதிக பாசம் காட்டிய அஜித்.. 10 படங்களில் கூடவே நடித்த அதிர்ஷ்டசாலி

அந்தப் பிரபல நடிகர் ஒப்பிடும்போது அஜித் எவ்வளவோ பரவாயில்லை என்று கூறலாம். ஏனென்றால் அவரும் மீடியா, ப்ரோமோஷன் மற்றும் பொது நிகழ்ச்சி என எல்லாவற்றையும் புறக்கணித்து வந்தார். அப்போது மட்டுமல்லாமல் இப்போதும் அதையே தான் பின்பற்றி வருகிறார்.

அதுமட்டுமின்றி எளிதில் அந்த நடிகரை பிடிப்பது சாதாரண காரியம் இல்லை. ஏனென்றால் மற்ற நடிகரை பார்ப்பதோ, பேசுவதோ கிடையாது. சினிமா பிரபலங்களிடம் இருந்து சற்று தள்ளியே உள்ளார். அந்த நடிகர் வேறு யாரும் இல்லை நவரச நாயகன் கார்த்திக் தான். இப்போது அஜித்தை போலவே அப்போது கார்த்திக் பொது நிகழ்ச்சிகளுக்கு செல்ல மாட்டார்.

Also Read : இயக்குனருக்கு அஜித் கொடுக்கும் டார்ச்சர்.. இழுத்தடிக்கும் ஏகே 62 அறிவிப்பு

மேலும் அவரது படங்களை ரசிகர்கள் கொண்டாடி தீர்த்தாலும் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள மாட்டாராம். இதனால் அப்போது சக நடிகர்களுக்கு இவர் மீது வெறுப்பு இருந்துள்ளது. ஆனாலும் ரசிகர்கள் அவரை கைவிடவில்லை. அதேபோல் தான் இப்போது அஜித்தையும் அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.

இவ்வாறு அஜித் மற்றும் கார்த்திக் இருவருக்கும் நிறைய ஒற்றுமைகள் இருந்துள்ளது. கார்த்திக் ஒரு சில படங்களில் வில்லனாக நடித்துள்ளார். ஆனால் இப்போது காலில் உள்ள பிரச்சனை காரணமாக சிகிச்சை பெற்று வருகிறார். அதில் இருந்து பூரண குணம் பெற்று மீண்டும் சினிமாவில் கார்த்திக் நடிக்க வேண்டும் என அவரது ரசிகர்கள் விரும்புகிறார்கள்.

Also Read : ஷங்கரின் 4 படங்களை ரிஜெக்ட் செய்த அஜித்.. அவர் சவகாசமே வேண்டாம் என்பதற்கு இது தான் காரணம்

Advertisement Amazon Prime Banner