Tamil Cinema News | சினிமா செய்திகள்
ஸ்டண்ட் மாஸ்டரிடம் அதிக பாசம் காட்டிய அஜித்.. 10 படங்களில் கூடவே நடித்த அதிர்ஷ்டசாலி
கடைசியாக அவருடன் விஸ்வாசம் படத்தில் நடித்த போது அதே அன்போடும் அக்கறையோடும் குடும்பத்தை பற்றி விசாரித்தார்.
அஜித்திற்கு மிகவும் திருப்புமுனையாக அமைந்த படம் தான் தீனா. இந்த படத்திற்கு பிறகு தான் பெரிய மாஸான ஹீரோவாக மக்கள் மனதில் இடம் பெற்றார். இப்படம் அரங்கத்தையே அதிர வைத்தது என்றே சொல்லலாம். இதில் அஜித்தின் நண்பர்களில் ஒருவராக நடித்தவர் தான் ஸ்டண்ட் மாஸ்டர்.
இதனைத் தொடர்ந்து ஆஞ்சநேயா, ஜனா, ஆழ்வார், என்னை அறிந்தால் மற்றும் விசுவாசம் போன்ற படங்களில் நடித்திருக்கிறார். அத்துடன் இன்னும் சில படங்களில் சைடு கேரக்டரில் வந்திருப்பார். தற்போது இவர் அளித்த பேட்டியில் அஜித்தை பற்றி கூறியுள்ளார். அதாவது தீனா படத்தில் பார்த்த அதே அன்போடு தான் இப்பொழுது வரை என்னிடம் பழகுகிறார்.
Also read: இயக்குனருக்கு அஜித் கொடுக்கும் டார்ச்சர்.. இழுத்தடிக்கும் ஏகே 62 அறிவிப்பு
அத்துடன் தீனா படத்திற்கான வாய்ப்பு வந்தபோது எனக்கு ஸ்டண்ட் தெரியும் என பொய் சொல்லி ஒரு சண்டைக் காட்சியில் அவருடன் நடித்தேன். ஆனால் அப்பொழுது மழை அதிகமாக வந்ததால் அப்பொழுது நடந்த ஃபைட்டில் நான் கீழே விழுந்து என் தலை வேகமாக தரையில் மோதி விட்டது.
சத்தத்தை கேட்டு அஜித் ரொம்பவும் பதறிவிட்டார். உடனே ஷூட்டிங்கை நிறுத்திவிட்டு, என்னிடம் வந்து அக்கறையாக தலையில் ஏதாவது அடிபட்டு விட்டதா என்று கேட்டார். அடுத்ததாக கூடிய சீக்கிரத்தில் சண்டையை பழகிக்கோங்க அது நமக்கும் நல்லது எதிராளிக்கும் நல்லது என்று கூறினார். அஜித் இவ்வளவு பாசத்தையும் காட்டினது வேறு யாரையும் இல்லை ஸ்டண்ட் மாஸ்டர் சம்பத் ராம்.
Also read: ஷங்கரின் 4 படங்களை ரிஜெக்ட் செய்த அஜித்.. அவர் சவகாசமே வேண்டாம் என்பதற்கு இது தான் காரணம்
மேலும் அடிபடாமல் சண்டை போட்டு பழகிட்டா நம்ம பண்ற வேலைக்கு ரொம்பவும் நல்லது என்று அட்வைஸ் கொடுத்தார். அதன் பிறகு நான் ஓரளவு ஸ்டன்ட் கற்றுக் கொண்டேன். அத்துடன் கடைசியாக அவருடன் விஸ்வாசம் படத்தில் நடித்த போது அதே அன்போடும் அக்கறையோடும் குடும்பத்தை பற்றி விசாரித்தார். எனக்கு அவர் அப்படி கேட்ட பொழுது மிகவும் சந்தோஷத்தை கொடுத்தது.
அதே மாதிரி ரஜினி சாரும் என்கிட்ட அப்படித்தான் பழகுவார். என்னை பார்க்கும் பொழுதெல்லாம் என்னை பற்றியும், என் குடும்பத்தை பற்றியும் விசாரித்து அடுத்து என்னென்ன படங்கள் நடித்துக் கொண்டிருக்கிறீர்கள் என்று கேட்டு தெரிந்து கொள்வார். இவர்கள் இப்படி என்னிடம் பழகுவது மிகவும் மகிழ்ச்சியை அளிக்கிறது என்று தற்போது கூறியுள்ளார்.
அஜித் மற்றும் சம்பத் ராம்

Ajith – sampath ram
Also read: தீனா படத்தில் தல அஜித்தை கலாய்க்கும் பிரேமம் பட இயக்குனர்.. புகைப்படம் உள்ளே!
