இளவு காத்த கிளியாக காத்துக் கொண்டிருந்த அமுதவாணன்.. ஜிபி முத்துவால் சாதுரியமாக பணத்தை தூக்கிய போட்டியாளர்

பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி 100 நாட்களைக் கடந்த வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த சீசன் முடிய இன்னும் மூன்று நாட்களே உள்ளது. எல்லா சீசனிலுமே கடைசி வாரத்தில் பணப்பெட்டி வைப்பார்கள். சிலர் சாதுரியமாக யோசித்து அந்த பணப்பெட்டியை எடுத்து பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறி விடுவார்கள்.

அந்த வகையில் கடந்த சீசன்களில் கேப்ரில்லா, சிபி போன்ற பிரபலங்கள் பணப்பெட்டியை எடுத்துச் சென்றுள்ளனர். தற்போது பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியின் இறுதியில் அமுதவாணன், அசீம், விக்ரமன், மைனா நந்தினி, கதிரவன் மற்றும் ஷிவின் ஆகியோர் உள்ளனர். ரசிகர்களை பொறுத்தவரையில் விக்ரமன் மற்றும் அசீமுக்கு தான் அதிக ஆதரவு இருந்து வருகிறது.

Also Read : தளபதி 67 இல் இணைந்த பிக் பாஸ் சீசன் 6 போட்டியாளர்.. ஒருவேளை விஜய்க்கு ரத்த சொந்தமா இருக்குமோ?

இதனால் கடந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் உள்ள போட்டியாளர்களை உற்சாகப்படுத்துவதற்காக இந்த சீசனில் இருந்து எலிமினேட்டான போட்டியாளர்கள் வந்திருந்தனர். இந்த வகையில் முதல் வாரமே தானாகவே முன்வந்து பிக் பாஸ் வீட்டை விட்ட வெளியேறிய ஜிபி முத்து மீண்டும் பிக் பாஸ் வீட்டிற்கு வருகை தந்திருந்தார்.

மற்ற போட்டியாளர்கள் எல்லோரையுமே உற்சாகப்படுத்தி வந்தார். இந்த சூழலில் அசீமுக்கு ஆதரவு அதிகமாக உள்ளதால் டைட்டில் வின்னர் பட்டத்தை அவர்தான் அடிப்பார் என ஜி பி முத்து கூறியிருந்தார். இதனால் அமுதவாணன் பணப்பெட்டிக்காக இரவு காத்த கிளியாக காத்துக் கொண்டிருந்தார்.

Also Read : ரசிகர்கள் மனதில் இடம் பிடித்த 5 பிக் பாஸ் போட்டியாளர்கள்.. டைட்டிலை அடிக்க போகும் அதிர்ஷ்டசாலி

ஆனால் இந்த சீசனில் வித்தியாசமாக பணமூட்டையாக பிக் பாஸ் அனுப்பி இருந்தார். அமுதவாணன் பணப்பெட்டியை எப்படியும் எடுத்துவிடுவார் என்று யோசித்த கதிரவன் ஒரு நிமிடம் கூட தாமதிக்காமல் சாதுரியமாக பணம் மூட்டை எடுத்துவிட்டார். ஆரம்பத்தில் எல்லோருமே கதிரவனை தடுத்தனர்.

இது அவனுடைய முடிவு, யாரும் மறுக்கக்கூடாது என அசீம் கேட்டுக் கொண்டார். அதன் பிறகு 3 லட்சம் பணம் முட்டையை கதிரவன் எடுத்துக்கொண்டு பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறிவிட்டார். சிறிது நேரம் கதிரவன் காத்திருந்தால் தொகையை பிக் பாஸ் அதிகப்படுத்தி இருப்பார். ஆனாலும் கதிரவன் சரியான முடிவுதான் எடுத்துள்ளார் என ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.

Also Read : 97 நாட்களில் ஏடிகே வாங்கிய சம்பளம்.. வாரி வழங்கிய பிக் பாஸ்