Ameer: ரஜினி, விஜய், அஜித்தை ஒரே போடாக போட்டு தாக்கிய அமீர்.. மலையாள சினிமா ஜெயிக்க இதுதான் காரணம், அவங்க கிட்ட கத்துக்கோங்க

Rajinikanth: குகையில் விழுந்த நண்பர் ஒருவரை கட்டி அணைத்தவாறு இன்னொரு நண்பர் கயிறு மூலம் மேலே ஏறுகிறார். சுற்றி இருக்கும் நண்பர்கள் கூட்டம் இருவரையும் பார்த்து ஆனந்த கண்ணீர் வடிக்கிறார்கள். பேக்ரவுண்டில் ‘ மனிதர் உணர்ந்து கொள்ள இது மனித காதல் அல்ல, அதையும் தாண்டி புனிதமானது’ என்ற பாடல் வரி.

அவ்வளவுதான் மஞ்சுமல் பாய்ஸ் படம் கோடிகளில் வசூலை அள்ளி விட்டது. கேரள படம், மம்முட்டி, மோகன்லால் என்ற தெரிந்த முகம் இல்லை, மலையாளம் புரியாது என்றெல்லாம் இல்லை. இந்த படத்திற்கு தமிழ்நாட்டில் அவ்வளவு பெரிய வரவேற்பு கிடைத்தது.

அதே நேரத்தில் சமீப காலமாக தமிழில் ரிலீஸ் ஆகும் படங்கள் எதுவுமே சொல்லிக் கொள்ளும் அளவுக்கு பெரிய வெற்றியை பெறவில்லை. இதற்கு என்ன காரணம் என்று எல்லாருக்கும் தோன்றலாம். சரியாக மக்கள் மனதை புரிந்து கொண்டு இயக்குனர் அமீர் ஒரு காரணத்தை சொல்லி இருக்கிறார்.

மலையாள சினிமா ஜெயிக்க இதுதான் காரணம்

அதாவது நம்மிடம் மிஸ் ஆவது எதார்த்தமான கதைக்களம் தான் என்று அமீர் தன்னுடைய பேட்டியில் சொல்லி இருக்கிறார். தமிழ் சினிமாவில் ஹீரோயிசம் அதிகமாக காட்டப்படுகிறது. ஒரு சில படங்களில் ஹீரோ என்ன பண்ண வேண்டும் என்பதை முடிவு செய்வதை அந்த நடிகராக தான் இருக்கிறார்.

ஹீரோக்களுக்கு பில்டப் அதிகமாக கொடுக்கப்படுகிறது. ஒரு ஹீரோ 50 பேரை அடிச்சு தூக்குவது போல் எத்தனை படங்கள் தான் நாமும் பார்ப்பது. தன்னுடைய புராணத்தையே பாடிக் கொண்டிருந்தாள் எதார்த்தமான கதைகளும் எப்படி உருவாகும்.

என்னுடைய இமேஜுக்கு இப்படி ஒரு கேரக்டரில் நடிப்பதா என்று ஹீரோக்கள் யோசிக்கிறார்கள். உண்மையை சொல்லப்போனால் உங்களுடைய இமேஜ் என்பது ஒரு நல்ல நடிகன் என்று தான் இருக்க வேண்டும். அதை நிரூபிப்பதற்காக எப்படிப்பட்ட கேரக்டரில் வேண்டுமானாலும் நடிக்கலாம்.

அதை விட்டுவிட்டு இன்னமுமே பஞ்ச் டயலாக்குகள், மாயாஜால வசனங்களை பேசிக்கொண்டே இருந்தால் தமிழ் சினிமா படுகுழியில் தான் விழும். அக்கட தேசத்து படங்கள் இங்கு கோடிகளில் வசூலை அள்ளும். இவ்வாறு இயக்குனர் அமீர் கூறி இருக்கிறார்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்