சனிக்கிழமை, டிசம்பர் 14, 2024

ஆச்சரியப்பட வைக்கும் எதிர்நீச்சல் சாரு பாலா.. நடித்த ஒரே படத்தால் கிடைத்த சீரியல் வாய்ப்பு

படத்துக்கு போட்டியாக ரசிகர்களை அதிகளவில் கவர்ந்து கொண்டு வருகின்ற சீரியல் என்றால் அது எதிர்நீச்சல் தான். அதிலும் இதில் நடிக்கிற கதாபாத்திரங்கள் அனைவரும் மக்கள் மனதில் நிலையாக இடம் பிடித்து வருகிறார்கள். அந்த வகையில் தற்போது சாருபாலா அவர்களின் நடிப்பு மிகவும் எதார்த்தமாகவும் ரசிகர்களை அதிக அளவில் கவரும் வகையில் இருக்கிறது.

இவருடைய தெளிவான பேச்சும், நேர்மையான கேரக்டரும், எதற்குமே அஞ்சாமல் தைரியமாக பேசும் குணமும் பார்க்கவே நன்றாக இருக்கிறது. இப்படி இவரைப் பற்றி சொல்லிக் கொண்டே போகலாம் அந்த அளவிற்கு இந்த நாடகத்தில் இவருடைய கதாபாத்திரம் மிகச் சிறப்பாக அமைந்து வருகிறது. அப்படிப்பட்ட இவரின் நிஜ வாழ்க்கையை பற்றி நாம் இப்பொழுது பார்க்கலாம்.

Also read: கதிரை மட்டம் தட்டிய குணசேகரன்.. எரிகிற நெருப்பில் எண்ணெயை ஊற்றிய நந்தினி

இவருடைய உண்மையான பெயர் ராதிகா வைரவேலவன். இவங்க ஒரு பரதநாட்டிய கலைஞர். ‘சதுர் லக்ஷனா’ அகாடமி ஆஃப் ஃபைன் ஆர்ட்ஸ் அப்படிங்கற ஒரு கலைக்கூட மூலமாக பல பேருக்கு கிட்டத்தட்ட 15 வருஷங்களாக பரதநாட்டியம் கற்றுக் கொடுத்து வருகிறார். இதற்காக டாக்டரேட் விருதையும் வாங்கி இருக்கிறார்.

அத்துடன் நாட்டிய செம்மல் விருதையும் பெற்றிருக்கிறார். பின்பு இவரை பொது நிகழ்ச்சியில் பார்த்த கலா மாஸ்டர், இவரிடம் சென்று உங்கள் பரதநாட்டியம் பார்த்து நான் மிகவும் மயங்கி இருக்கிறேன். சினிமாவில் நுழைந்ததற்கு அப்புறம் என்னுடைய பரதநாட்டியத்தை நான் மறந்துவிட்டேன் என்றே சொல்லலாம். உங்களுடைய நாட்டியத்தை பார்க்கும் பொழுது எனக்கு மீண்டும் பரதநாட்டியம் ஆட வேண்டும் என்று ஆசையாக இருக்கிறது.

Also read: எஸ் கே ஆர் பொண்டாட்டினா வாயை பிளக்கும் குணசேகரன்.. மெண்டல் என லெப்ட் அண்ட் ரைட் வசை பாடிய எக்ஸ் லவ்வர்

ஆனால் எனக்கு இப்பொழுது மறந்து போனதால் மீண்டும் நீங்கள் எனக்கு சொல்லித் தர வேண்டும் என்று கேட்டு இவரிடம் இருந்து பல ஸ்டெப்புகளை கற்று இருக்கிறார் கலா மாஸ்டர். மற்றும் ஜெயா டிவியில் ஒளிபரப்பாகி வந்த தக்கத்திமிதா டான்ஸ் ஷோவில் ஜட்ஜ் ஆகவும் பங்கேற்று இருக்கிறார். அத்துடன் சினிமா படத்திலும் நடித்திருக்கிறார்.

கடந்த வருடம் வெளிவந்த வேழம் என்ற திரைப்படத்தில் அசோக் செல்வனுக்கு அக்காவாக நடித்திருக்கிறார். இதன் மூலமாகத்தான் இவருக்கு எதிர்நீச்சல் சீரியலில் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்திருக்கிறது. எல்லாருக்கும் குடைச்சல் கொடுக்கும் குணசேகரனை உண்டு இல்லைன்னு வச்சு செய்யும் ஒரு தில்லான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

Also read: குணசேகரனை மடக்கிய எஸ் கே ஆர் தம்பிகள்.. இவரை மிஞ்சும் அளவிற்கு பிளான் போட்ட அப்பத்தா

- Advertisement -

Trending News