சிம்புக்கு வலைவிரித்த அமலாபால்.. நல்ல பொருத்தமான வேலை பார்க்கும் விஜய் டிவி

கிசுகிசுப்புக்கு சொந்தக்காரரான சிம்பு, மாநாடு படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் தன்னுடைய செகண்ட் இன்னிங்சை துவங்கியுள்ளார். அவரைக் காதலித்து கழட்டிவிட்டவர்களெல்லாம் வரிசையாக திருமணம் செய்து கொண்டிருக்கும் நிலையில், சிம்புவிற்கு திருமணம் எப்போது என அவருடைய ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கையில் விஜய் டிவியின் மூலம் அவருக்கு ஒரு வரன் கிடைத்திருக்கிறது.

அதாவது சின்னத்திரை ரசிகர்களுக்கு பிடித்தமான என்டர்டைன்மென்ட் நிகழ்ச்சிகளை வழங்குவதில் விஜய் டிவியை அடிச்சுக்க ஆளே இல்லை. இதில் மிகவும் பிரபலமான குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 3-வது சீசன் நிறைவடைந்ததை தொடர்ந்து, அடுத்ததாக என்ன ஷோ துவங்கப் போகிறது என எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

இந்நிலையில் பிக்பாஸ் பிரபலம் ராஜு தொகுத்து வழங்கும் ‘ராஜு வீட்ல பார்ட்டி’ என்ற புத்தம் புது என்டர்டைன்மென்ட் நிகழ்ச்சி வரும் ஜூலை 24 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை ஒளிபரப்பாக உள்ளது. இந்த நிகழ்ச்சியின் ப்ரோமோ சமீபத்தில் வெளியாகி வைரல் ஆனது.

இதில் ராஜுவுடன் பிரியங்கா, சுனிதா, மதுரை முத்து போன்ற பல பிரபலங்கள் நிகழ்ச்சியில் உள்ளனர். இந்நிகழ்ச்சியில் இவர்களுடன் சினிமா பிரபலங்கள் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு நிகழ்ச்சியை கலகலப்பாக்க உள்ளனர்.

இதில் வரும் வாரம் நடிகை அமலாபால் தான் சிறப்பு விருந்தினராக வரப்போகிறார். அவரிடம் ‘உங்களுக்கு யார் மீது செலிபிரிட்டி க்ரஷ் இருக்கிறது’ என கேட்ட கேள்விக்கு சூர்யா என பதில் சொல்கிறார். அதன் பிறகு லவ் மீட்டரை கையில் வைத்துப் பார்க்கும்போது அது உயரவே இல்லை.

அப்போது அமலா பால், சூர்யாவின் மனைவி ஜோதிகா என்னமோ செய்கிறார்கள் என கலகலப்புடன் பேசுகிறார். பிறகு ராஜு திருமணமாகாத ஏதாவது ஒரு செலிபிரிட்டியை சொல்லுங்கள் என்றதும் கொஞ்சம் கூட யோசிக்காமல் சிம்பு பெயரை அமலாபால் சொல்லி அவருக்கு கொண்டி போட்டுள்ளார்.

சிம்பு-அமலாபால் ஜோடி விஜய் டிவி மூலம் ரெடி ஆகி இருக்கிறது. மேலும் செலிபிரிட்டிகளுடன் டேட்டிங் செய்திருக்கிறீர்களா எனக் கேட்டதற்கு அமலாபால் ஒத்துக் கொண்டுள்ளார். இப்படி அமலா பால் சுவாரசியமான பல தகவல்களை இந்த நிகழ்ச்சியில் போட்டு உடைத்துள்ளார்.

இந்த நிகழ்ச்சி டிஆர்பி-யில் நிச்சயம் எகிறும் என இப்பவே கணித்துள்ளார். ஏற்கனவே ஹிந்தியில் 3 சீசன்களாக ஒளிபரப்பாகி ரசிகர்களை கவர்ந்த ‘தி கபில் ஷர்மா ஷோ’ (The Kapil Sharma Show) நிகழ்ச்சி போல் ராஜு வீட்ல பார்ட்டியும் இருக்கிறது. ஆகையால் இந்த நிகழ்ச்சிக்கு நிச்சயம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.