ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 15, 2024

நான் அம்மாவா இல்லை பாட்டியா.. 2ம் திருமணம் குறித்து வருத்தப்பட்ட விஜயகாந்த் பட ஹீரோயின்

90களில் தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்த இந்த ஹீரோயின் விஜயகாந்த் படத்தின் மூலம் புகழின் உச்சிக்கு சென்றார். அதைத்தொடர்ந்து இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளிலும் நடித்து தனக்கென ஒரு இடத்தை பிடித்தார். அவ்வாறு இருக்க தற்பொழுது இவர் தன் இரண்டாவது திருமணத்தை குறித்து மனம் திறந்து பேசி வருவது பரபரப்பை உண்டாக்கி உள்ளது.

ஒரு காலகட்டத்தில் குஷ்பூக்கு அடுத்து தமிழ் சினிமாவில் பெருதளவு பேசப்பட்டவர் தான் சுகன்யா. இவர் பல முக்கிய பிரபலங்களோடும் நடித்திருக்கிறார். மேலும் சில காலங்களிலேயே தன் நடிப்பிற்கு முட்டுக்கட்டை போட்டுக் கொண்டார். அதைத்தொடர்ந்து 2002ல் ஸ்ரீதர் ராஜேந்திரன் என்பவரை பெரியோர் சம்மதத்தோடு திருமணமும் செய்து கொண்டார்.

Also Read: விஜயகாந்தின் தற்போதைய மோசமான நிலைமைக்கு காரணம் அவரே.. பகிர் சம்பவங்களை கூறிய பிரபலம்

ஆனால் குறுகிய காலத்திலேயே இருவரும் மனவேறுபாடு காரணமாக பிரிந்து விட்டனர். அதன்பின் இவ்வளவு காலங்கள் தனிமையில் இருந்த இவர் தற்பொழுது தன் இரண்டாவது திருமணம் குறித்து பேசி வருவது மக்களை ஆச்சரியப்பட செய்கிறது. அண்மையில் ஒரு பேட்டியில் இப்படி ஒரு கேள்விதான் அவரின் முன் வைக்கப்பட்டது.

அதற்கு அவர் இந்த ஆண்டு தனக்கு 50 வயது தொடங்க போவதாக கூறி இதற்குப் பின் திருமணம் தேவையா என யோசிப்பதாக கூறினார். அவ்வாறு திருமணம் செய்து கொண்டாலும் இதற்கு மேல் பிள்ளைகளை பெற்றால் அவை என்னை அம்மா என்று கூப்பிடுமா இல்ல பாட்டி என்று கூப்பிடுமா என்று கூறி நகைத்துக் கொண்டார்.

Also Read: எம்ஜிஆர், விஜயகாந்த் போல உதவி செய்த வாரிசு நடிகை.. ஒரு கோடிக்கு தங்க காசுனா சும்மாவா!

மேலும் எடுத்தோம் கவுத்தோம் என செய்யக்கூடிய வேலை இல்லை இது. சமூக சர்ச்சைக்கு ஆளாகுவது ஒரு பக்கம். இருப்பினும் தான் எடுக்கும் முடிவு தவறாக போய் விடக்கூடாது என்பதிலும் தெளிவாக இருப்பதாக கூறினார். ஆனாலும் வரும் வாய்ப்பினை தவற விட மாட்டேன் என்று மதில் மேல் இருக்கும் பூனையை போன்று பதில் கூறி வருகிறார் சுகன்யா.

மேலும் தன் இறுதி காலம் வரை ஒரு துணை தேவை என்பதை உணர்வதாகவும், அதை காலம் கடந்து செய்வதால் ஏற்படும் விளைவை எதிர் கொள்ளவும் பயப்படுவது போல இவரின் பதில் இருந்து வருகிறது. மேலும் இவர் என்ன முடிவு எடுக்கிறார் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Also Read: குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி சீரழிந்து 5 நடிகர்கள்.. சுற்றி என்ன நடக்குது என தெரியாமல் போன விஜயகாந்த்

- Advertisement -

Trending News