புது சீரியல் என்ட்ரியால் பாய் பிரண்டுடன் ஓவர் நெருக்கம் காட்டும் ஆல்யா.. அம்மணி சிக்கும் அடுத்த சர்ச்சை

விஜய் டிவி சீரியல் மூலம் பிரபலமான ஆல்யா மானசாவுக்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றனர். இரண்டாவது குழந்தை பிறந்த பிறகு மீண்டும் சீரியலில் என்ட்ரி கொடுத்திருக்கும் ஆலியா மானசா தற்போது படு பிஸியாக மாறியுள்ளார். அந்த வகையில் இவர் இப்போது சன் டிவியில் ஒளிபரப்பாகும் இனியா சீரியலில் ஹீரோயினாக நடித்துக் கொண்டிருக்கிறார்.

எப்போதுமே சோசியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் இவர் சீரியலில் நடிக்க வந்த பிறகு ரொம்பவும் உற்சாகமாக மாறியுள்ளார். அதாவது சக நடிகர், நடிகைகளுடன் நேரம் செலவழிப்பது, ரீல்ஸ் வீடியோ போடுவது என்று சோசியல் மீடியாவை கலக்கிக் கொண்டிருக்கிறார். அதிலும் லேட்டஸ்டாக அவர் வெளியிட்டு இருந்த ஒரு வீடியோ புது சர்ச்சைக்கு அஸ்திவாரம் போட்டுள்ளது.

Also read: கண்ணம்மா உனக்கு எண்டே இல்லையா.. மீண்டும் புதிய பாரதியுடன் தொடங்கிய 2ம் பாகம்

அதாவது அவர் அந்த சீரியலில் ஹீரோவாக நடிக்கும் ரிஷியுடன் சேர்ந்து ஒரு வீடியோ செய்திருக்கிறார். அதில் அவர் ரீல் பாய் பிரண்ட் என்ற வார்த்தையையும் குறிப்பிட்டு இருக்கிறார். இதை பார்த்த சில ரசிகர்கள் அவருக்கு எதிரான கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். அதாவது உங்கள் கணவர் கயல் சீரியலில் நடித்து வருகிறார்.

ஆனால் அவர் ஒரு நாளும் இதுபோன்று சக நடிகைகளுடன் எந்த ஒரு வீடியோவையும் வெளியிட்டது கிடையாது. ஆனால் நீங்கள் எதற்காக இப்படி எல்லாம் வீடியோ போடுகிறீர்கள் என்று கமெண்ட் கொடுத்து வருகின்றனர். மேலும் சில ரசிகர்கள் புது சீரியல் வந்தவுடன் ஹீரோவுடன் நெருக்கமாகி விட்டீர்களா என்று மோசமான கமெண்ட்களையும் கொடுத்து வருகின்றனர்.

Also read: பத்து வருஷத்துக்கு பின்தங்கி போன ஆல்யாவின் ராஜா ராணி 2.. மொக்க கதையை உருட்டும் இயக்குனர்

ஏற்கனவே இவர் ராஜா ராணி 2 சீரியலில் நடிக்கும் போது ஹீரோவுடன் பல நெருக்கமான காட்சிகள் இவருக்கு இருந்தது. அதுவே பல விமர்சனங்களை ஏற்படுத்திய நிலையில் சீரியலில் இருந்து அவர் விலகியதால் பிரச்சனைகள் சற்று ஓய்ந்திருந்தது. இந்நிலையில் புது சீரியல் மீண்டும் அவருக்கு ஒரு பிரச்சனையை ஏற்படுத்தி இருக்கிறது.

இருப்பினும் அவருக்கு எதிராக வரும் விமர்சனங்களுக்கு ஆதரவாக சில ரசிகர்கள் கமெண்ட் கொடுத்து வருகின்றனர். சன் டிவியில் சில மாதங்களுக்கு முன்பு ஆரம்பித்த இந்த இனியா சீரியல் தற்போது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. அது மட்டுமல்லாமல் டிஆர்பி யிலும் இந்த சீரியல் முன்னணியில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

Also read: டிஆர்பி-யில் அடித்து நொறுக்கும் டாப் 6 சீரியல்கள்.. இணையத்தை தெறிக்க விடும் லிஸ்ட் இதோ.!

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்