சனிக்கிழமை, டிசம்பர் 14, 2024

ராஜா ராணி சீரியலில் இருந்து விலகுகிறாரா ஆலியா.? சஞ்சீவ் ஹாப்பி அண்ணாச்சி

விஜய் டிவியில் ஒளிபரப்பான ராஜா ராணி சீரியலில் சஞ்சீவ் கார்த்திக் மற்றும் ஆலியா மானசா இருவரும் ஜோடியாக நடித்து இருந்தார்கள். இவர்களது ஜோடி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இத் தொடரில் நடிக்கும் போது இருவரும் காதலித்து பின்பு திருமணம் செய்து கொண்டார்கள்.

இவர்களுக்கு திருமணமாகி ஒரு வருடத்திற்குள் அய்லா என்ற பெண் குழந்தை பிறந்தது. சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் ஆலியா அவ்வப்போது தன் குழந்தையின் வீடியோக்களை பதிவிடுவார். தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ராஜா ராணி 2 சீரியலில் சித்துக்கு ஜோடியாக நடித்து வருகிறார் ஆல்யா மானசா.

சமீபத்தில் சஞ்சீவ் இன்ஸ்டாகிராமில் ஆல்யாவின் வீடியோ ஒன்றை பதிவிட்டிருந்தார். அந்த வீடியோவில் ஆலியா சாப்பிடும்போது நல்லா சாப்பிடுங்க அப்பதான் அய்லா மாதிரி ஒரு லைலா வரும் என்று பேசி பதிவிட்டிருந்தார். இதைத்தொடர்ந்து சன்டிவியில் ஒளிபரப்பாக உள்ள கயல் தொடரில் சஞ்சீவ் கதாநாயகனாக நடித்துள்ளார்.

கயல் தொடரின் பிரமோஷனுக்காக இன்ஸ்டாகிராமில் லைவ்வில் வந்த சஞ்சீவ், ஆலியா மானசா இரண்டாவது முறையாக அம்மாவாக போகிறார் என்பதை சஸ்பென்சாக சொல்லியிருந்தார். இதைக் கேட்ட அவரது ரசிகர்கள் இருவருக்கும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

ராஜா ராணி2 சீரியல் ஆரம்பத்தில் மந்தமாக சென்றாலும் தற்போது புதிய திருப்பங்களுடன் விறுவிறுப்பாக செல்கிறது. சுவாரசியமாக செல்லும் இத்தொடரில் முழு கவனத்தையும் செலுத்தி வருகிறார் ஆல்யா மானசா.

raja rani serial
raja rani serial

தற்போது இவர் கர்ப்பமாக உள்ளதால் இத்தொடரில் தொடர்ந்து நடிப்பாரா என ரசிகர் மத்தியில் கேள்வி எழுந்துள்ளது. விஜய் டிவியின் முக்கிய தொடர்களில் நடிகர், நடிகைகளை மாற்றி வரும் நிலையில் ஆல்யாவும் மாற்றப்படுவாரா என பொறுத்திருந்து பார்ப்போம்.

- Advertisement -

Trending News