விஜய் டிவியில் ஔிபப்பாகும் அத்தனை சீரியல்களு்ம் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றவையே. சில சீரியல்களால் சீரியல்களின் கிங்காக வலம் வந்த சன் நெட்வொர்க்கையே பின்னுக்கு தள்ளியது விஜய் டிவி.
அப்படியாக மக்கள் விரும்பும் சீரியல்களில் முக்கியம் வகிப்பது ராஜா ராணி இந்த சீரியலில் நடித்த ஆலயா மானசா-சஞ்சீவி நிஜவாழ்விலும் ஜோடி சேர்ந்தனர் 2019-ல் திருமணம் செய்த இந்த ஜோடிக்கு ஒரு குழந்தையும் உள்ளது.
எப்போதுமே விஜய் டிவி ஹிட் கொடுத்த பலரையும் மீண்டும் பயன்படுத்துவது வழக்கமே. இப்போதும் இருவரும் விஜய் டிவியில் மாறுபட்ட சீரியல்களில் நடித்து வருகின்றனர். இந்நிலையில் “ஆலயா சஞ்சீவி” என்கிற பெயரில் யூடியுப் சேனல் துவங்கி இருவரும் சேர்ந்து சில வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர்.
அம்மாதிரியான ஒரு வீடியோவில் ஜெயம்ரவி ஜெனிலியா நடிப்பில் வந்த சந்தோஷ் சுப்ரமணியம் படத்தில் வரும் “முட்டுனா கொம்பு முளைக்கும்” எனன்கிற காட்சியை ஆலயாவும் சஞ்சீவியும் நடித்து வெளியிட்டார். பல்வேறு நல்ல கமாண்டுகள் வந்தாலும் நெட்டிசன்கள் பலரும் ஜெனிலியா பன்னதே தாங்க முடியல என்பது போன்ற கமாண்டுகளால் தெறிக்கவிட்டு வருகின்றனர்.